வீடியோ : இந்த வருடத்துடன் ரிட்டையர் ஆகுறீங்களா? டேனி மோரிசன் கேள்விக்கு தோனியின் சர்ப்ரைஸ் பதில் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 3ஆம் தேதி லக்னோவில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் நேருக்கு நேராக மோதிக்கொண்ட இந்த மைதானத்தில் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் காயமடைந்து வெளியேறியதால் தற்காலிகமாக க்ருனால் பாண்டியா வழி நடத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.

இருப்பினும் இன்று காலை மழை பெய்ததால் தாமதமாக 3.45 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். குறிப்பாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்ததால் பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் அதற்கேற்றார் போல பகல் நேர போட்டியாக இருந்தாலும் பந்து வீச விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன் சென்னை அணியில் தீபக் சஹர் காயத்திலிருந்து குணமடைந்து ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக களமிறங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

சர்ப்ரைஸ் பதில்:
அப்போது உங்களுடைய இந்த கடைசி வருடத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களா என்று வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனி மோரிசன் வெளிப்படையாகவே தோனியிடம் கேள்வி எழுப்பினார். ஏனெனில் விரைவில் 42 வயதை தொடும் அவர் என்ன தான் ஃபிட்டாக இருந்தாலும் வேகமாக போடி டபுள் ரன்களை எடுக்க முடியாமல் இந்த சீசனில் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். அத்துடன் தன்னை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்களின் இதற்கும் பாசத்தால் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னையில் நடைபெறும் என ஏற்கனவே தோனி தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் தன்னுடைய கேரியரின் கடைசியில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தோனி கூறினார். அது போக ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் கொல்கத்தாவை மிஞ்சி தமக்காக சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்த உள்ளூர் ரசிகர்கள் ஓய்வு பெறும் தமக்கு வழியனுப்பும் வகையில் வந்ததற்கு நன்றி எனவும் தோனி தெரிவித்தார்.

- Advertisement -

இந்த அடுத்தடுத்த கருத்துக்கள் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற போகிறார் அவரே மறைமுகமாக சொன்னதாகவே பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த போட்டியில் உங்களுடைய கடைசி சீசனில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களா என்று டேனி மோரிசன் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு “இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள். நான் இல்லை” என மிகப்பெரிய சிரித்த முகத்துடன் தோனி பதிலளித்து டேனி மோரிசனை வியக்க வைத்தது.

அப்படியானால் நீங்கள் நிச்சயம் கம்பேக் கொடுக்கப் போகிறீர்கள் என்று அதற்கு டேனி மோரிசன் புன்னகையுடன் கூறினார். அதாவது இந்த வருடத்துடன் ஓய்வு பெற போகிறேன் என்பதை நான் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லாத நிலைமையில் நீங்களே முடிவு செய்தால் எப்படி என்ற வகையில் தோனி கலகலப்புடன் கூறினார். இதனால் இந்த வருடத்தை தாண்டி நல்ல ஃபிட்டாகவும் அதிரடியான சிக்சர்களையும் பறக்க விட்டு வரும் அவர் அடுத்த வருடமும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: IPL 2023 : அவங்க அடங்கணும்னா தூசியான அபராதம் போதாது, அந்த தண்டனை கொடுங்க – கவாஸ்கர் கோரிக்கை

மொத்தத்தில் அவருடைய எதிர்பாராத இந்த கருத்து சென்னை ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரிலும் விடை பெறுவார் என்று கடந்த சில வருடங்களாகவே பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஆனாலும் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் இதே போல் சர்ப்ரைஸ் கருத்துகளால் பதிலளித்து வரும் தோனி அடுத்த வருடமும் விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.

Advertisement