IPL 2023 : அவங்க அடங்கணும்னா தூசியான அபராதம் போதாது, அந்த தண்டனை கொடுங்க – கவாஸ்கர் கோரிக்கை

Gavaskar
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் வெள்ளை கோட்டுக்கு உள்ளே இருந்தும் முகமது சிராஜ் கோபத்துடன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் அதிருப்தியில் இருந்த நவீனுக்கும் அருகில் நின்று கொண்டிருந்த விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் தடுத்த நிலையில் போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்ட போது அவர்களிடையே ஏற்பட்ட மோதலை மீண்டும் கிளன் மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார்.

Virat Kohli Gambhir.jpeg

- Advertisement -

அந்த மோதலை பெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்காமல் முதல் ஆளாக விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாகும் மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தனைக்கும் ஒரே மாநிலத்தில் பிறந்து 2011 உலகக்கோப்பை உட்பட இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் இணைந்து விளையாடியும் 2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியிடம் சண்டை போட்ட கம்பீர் 10 வருடங்கள் கழித்தும் பகை மறக்காமல் மீண்டும் சண்டை போட்டது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கவாஸ்கர் கோரிக்கை:
இறுதியில் கேஎல் ராகுல் சமாதானம் செய்ததால் பகையை மறந்து கை கொடுக்க வந்த விராட் கோலியிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்று நவீன்-உல்-ஹக் திமிராக சென்றது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. மொத்தத்தில் ஜென்டில்மேன் விளையாட்டாக பார்க்கப்படும் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக இருந்தும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு அப்போட்டியின் 100% சம்பளமும் அபராதமாக விதித்த ஐபிஎல் நிர்வாகம் நவீனுக்கு 50% அபராதம் அறிவித்தது.

இந்நிலையில் ஒரு ஐபிஎல் சீனில் விளையாடுவதற்கு கிட்டத்தட்ட 17 கோடி சம்பளம் வாங்கும் விராட் கோலிக்கு ஒரு போட்டியின் 100% சம்பளம் சுமார் 1+ கோடியாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அந்த ஒரு கோடி சம்பளத்தை அபராதமாக செலுத்துவது விராட் கோலிக்கு சர்வ சாதாரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது போன்ற பெரிய சண்டையில் ஈடுபட்ட அவருக்கு சில போட்டிகளில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2008இல் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த ஹர்பஜனுக்கு சில போட்டிகள் தடை விதித்தது போல விராட் கோலி மட்டுமல்லாமல் கௌதம் கம்பீருக்கும் அபராதத்தை தாண்டிய தண்டனை வழங்க வேண்டும் கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியை நான் நேரடியாக பார்க்காததால் சில வீடியோக்களை மட்டும் பார்த்தேன். அது நிச்சயமாக பார்ப்பதற்கு நன்றாக இல்லை. ஒரு போட்டியில் 100% சம்பளம் எவ்வளவு? 100 சதவீதத்திற்கு சமமான சம்பளம் எவ்வளவு? எடுத்துக்காட்டாக விராட் கோலி பெங்களூரு அணிக்கு விளையாடுவதற்காக 17 கோடி சம்பளமாக வாங்குவார்”

Gavaskar

“அதாவது செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் உட்பட சராசரியாக 16 போட்டிகளுக்கு அவர் 17 கோடி வாங்குகிறார். நீங்கள் ஒரு கோடியை பற்றி பேசுகிறீர்கள். எனவே அவர் ஒரு கோடியை அபராதம் கட்டுவாரா? அப்படியானால் அது மிகவும் குறைவான அபராதமாகும். அதே போல கம்பீரின் சம்பளம் பற்றி எனக்கு தெரியாது. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும். இந்த அபராதத்தால் இது போன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாது என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் இது மிகவும் சிறிய தண்டனையாகும்”

இதையும் படிங்க:வீடியோ : இது தான் என் வாழ்வில் பார்த்ததிலேயே சிறந்த நக்குள் பால் – இந்திய வீரரை மனதார பாராட்டிய டேல் ஸ்டைன்

“நீங்கள் இந்த போட்டியை கடினமாக விளையாட விரும்புகிறீர்கள். எங்கள் காலத்தில் நாங்கள் ஆக்ரோசத்துடன் விளையாடியுள்ளோம். ஆனால் இந்தளவுக்கு மோதியதில்லை. இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதால் சற்று அதிகமாகவே சண்டை செய்கிறார்கள். எனவே என்னுடைய கருத்து என்னவெனில் இது மீண்டும் நடைபெறக் கூடாது. அதற்கு 10 வருடங்கள் முன்பாக ஹர்பஜன் – ஸ்ரீசாந்த்தை சில போட்டிகள் ஒதுக்கியதைப் போன்ற தண்டனையை கொடுக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவது அந்தந்த அணிகளுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும். இப்போது வழங்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் சிறியதாகும்” என்று கூறினார்.

Advertisement