ஒரே போட்டியில் 2 விதிமுறைகளை மீறிய இஷாந்த் சர்மா.. 2 தண்டனைகளை அறிவித்த பிசிசிஐ.. காரணம் என்ன?

Ishant Sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஆறாம் தேதி ஹைதராபாத் நகரில் 19வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத்தை அதனுடைய சொந்த மண்ணில் குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஹைதெராபாத் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 153 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 31 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய குஜராத் மிகவும் நேர்த்தியாக பேட்டிங் செய்து 16.4 ஓவரில் 153-3 ரன்களை அடித்து தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 61*, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 49, ரூதர்போர்ட் 35* ரன்கள் அடித்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

இஷாந்த் சர்மாவுக்கு தண்டனை:

ஹைதெராபாத் அணிக்கு ஷமி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் 4வது தோல்வியை சந்தித்தது. அதனால் ஹைதெராபாத் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் குஜராத் அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர மூத்த வீரர் இஷாந்த் சர்மா விளையாடினார்.

ஆனால் அந்த வாய்ப்பில் மோசமாக பௌலிங் செய்த அவர் 4 ஓவரில் 53 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதை விட அந்தப் போட்டியில் அவர் 2 விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி ஒரு போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடை, தரை, உபகரணங்கள், சாதனங்கள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்திய 2.2 விதிமுறையை இஷாந்த் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:

2.2 விதிமுறையில் பிட்ச், பவுண்டரி எல்லைகளை வேண்டுமென்று எட்டி உதைப்பது, விளம்பரப் பலகைகளை சேதம் செய்வது, பெவிலியன் அருகில் உள்ள கதவுகள், கண்ணாடிகள், ஜன்னல்கள் போன்ற பொருட்களை சேதம் செய்வது ஆகியவை அடங்கும். மேற்குறிப்பிட்டத் தவறுகளில் இஷாந்த் சர்மா ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை செய்துள்ளார். அதனால் அவருக்கு 2.2 லெவல் 1 விதிமுறையை மீறியதற்காக போட்டி சம்பளத்திலிருந்து 25% அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொந்த மைதானத்தில் வைத்து பெஸ்ட் ஸ்பெல்லுடன் செஞ்சுரி அடித்த முகமது சிராஜ் – அசத்தல் சாதனை

அத்துடன் அவருக்கு ஒரு கருப்பு புள்ளி வழங்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த கருப்பு புள்ளிகளின் எண்ணிக்கை 50 தொடும் போது இஷாந்த் சர்மா 1 போட்டியில் விளையாடுவதற்கு தாமாகவே தடை பெறுவார். மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல் தொடரில் விளையாடிய அவருக்கு போட்டியும் சரியாக அமையவில்லை 2 தண்டனையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement