- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி – கோலியின் வித்தியாசம் இதான்.. தப்பு செஞ்சா தான் கத்துக்க முடியும்ன்னு சொல்வாரு.. இஷாந்த் பேட்டி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி, விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்படுகின்றனர். கேப்டனாக அவர்களுடைய தலைமையில் இந்தியா பல வெற்றிகளைப் பெற்று சாதனைகளைப் படைத்தது. குறிப்பாக 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் முறையாக நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனைப் படைத்தது.

அத்துடன் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். மறுபுறம் விராட் கோலி ஐசிசி கோப்பையை வெல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

தோனி – கோலி வித்தியாசம்:

மேலும் 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்கள் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக ஜொலித்த இந்தியா அவரது தலைமையில் 40 வெற்றிகள் பெற்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய மற்றும் ஆசியக் கேப்டன் ஆகிய 2 சாதனைகளையும் விராட் கோலி படைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன்களாக தோனி – விராட் கோலிக்கு இடையே உள்ள வித்தியாசத்தையும் அவர்களுடைய தலைமையில் விளையாடிய இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

பொதுவாக தோனி அணி மீட்டிங்கில் அதிகம் திட்டமிடாமல் களத்தில் முடிவுகளை எடுப்பார் என்று இஷாந்த் கூறியுள்ளார். அத்துடன் தவறு செய்தால் மட்டுமே பாடங்களைக் கற்க முடியும் என்ற கொள்கையை தோனி வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மறுபுறம் விராட் கோலி திட்டங்களை வகுத்து செயல்பட கூடியவர் என்று தெரிவிக்கும் அவர்

- Advertisement -

பகிர்ந்த இஷாந்த்:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி தலைமையில் விளையாடுவதில் உள்ள வித்தியாசம் என்னவெனில், மஹி பாய் எப்போதும் அனைத்து விஷயங்களையும் களத்தில் எடுப்பார். அவர் முடிவுகளைக் களத்தில் எடுப்பதை விரும்புவார். ஆனால் விராட் கோலி அப்படியல்ல. அவரிடம் அடிப்படை திட்டம் இருக்கும்”

இதையும் படிங்க: கருண் நாயர் இந்திய கேரியர் முடிந்ததா? வெ.இ தொடரில் கழற்றி விடப்பட்டது ஏன்? அஜித் அகர்கர் பதில்

“விஷயங்கள் எப்படி முன்னேறியுள்ளது என்பதற்கு தகுந்தார் போல் அவர் முடிவுகளை எடுப்பார். எம்எஸ் தோனி மீட்டிங் போட்டு பேசுவதில் பெரிய நம்பிக்கை இல்லாதவர். நீங்கள் தவறுகள் செய்தால் மட்டுமே பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற எளிமையான அடிப்படையை தோனி வைத்திருந்தார். பொதுவாக தோனி நீங்கள் ஒரு தவறு செய்த பின் அடுத்த தவறை செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்களோ, அதுவே நிலைத்தன்மை என்று நினைத்தார்” எனக் கூறினார்.

- Advertisement -