
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியானது டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இசான் கிஷன் 53 ரன்களையும், திலக் வர்மா 45 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே குவித்ததால் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 53 ரன்கள் குறித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில் : இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாட விரும்பினேன்.
மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்வதை விரும்பினாலும் உலக கோப்பை எதிரில் வருவதால் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயார். ஆனால் தற்போது என்னுடைய கவனம் அனைத்தும் அணியின் நலம் நோக்கியே உள்ளது. தற்போதைக்கு துவக்க வீரராக விளையாடுவதை விரும்புகிறேன். பந்துகளை பார்த்து அதற்கேற்றார் போல் அடித்து விளையாட ஆசைப்படுகிறேன். அப்படி என்னுடைய திட்டம் சரியாக இருப்பதால் என்னுடைய பேட்டில் இருந்து ரன்களும் வருகிறது.
இதையும் படிங்க : சிறப்பான கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்று டி20 தரவரிசையிலும் முன்னேற்றம் கண்ட – இஷான் கிஷன்
இந்த உலகக்கோப்பை தொடரில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறேன் என்று இஷான் கிஷன் அறிவித்துள்ளார். இப்படி இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் இடத்தை அவர் பிடிக்க விரும்புகிறார் என்று தெரிகிறது. பயிற்சி போட்டியிலேயே அவருக்கு துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதால் டி20 உலக கோப்பை தொடரிலும் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.