- Advertisement -
ஐ.பி.எல்

சரியான நேரத்தில் எல்லாம் சரியாக நடந்தது.. ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு – இஷான் கிஷன் மகிழ்ச்சி

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது :

எல்லா திட்டங்களும் சரியாக நடந்தது : இஷான் கிஷன் மகிழ்ச்சி

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்தது. பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக சன்ரைசஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இந்த போட்டியின் மூலம் சேர்த்துள்ளோம். இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது பந்து வீச்சாளர்கள் சரியான திட்டங்களுடன் வந்து சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் அறிமுகமான இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியோடு மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும் பீல்டிங்கில் சற்று முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். எங்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான வருண் ஆரோன் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் என்பதனால் பந்துவீச்சாளர்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வருவதற்காக சரியான பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கொஞ்சம் தப்பு கணக்கு போட்டுட்டேன்.. சறுக்கல் ஏற்பட்டது இங்கதான் – ரியான் பராக் வருத்தம்

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் நாங்கள் அதிரடியாக பேட்டிங் செய்யும்போது இன்னும் கூடுதலாக ரன்கள் வரும் என்று நினைத்தோம். இந்த போட்டியை பொறுத்தவரை 25 ரன்கள் குறைவாக அடித்ததாகவே நினைக்கிறோம். ஆனாலும் 200 ரன்களுக்கு மேல் இந்த மைதானத்தில் சேசிங் செய்வது கடினம் என்றும் நினைத்தோம். அந்த வகையிலே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளோம் என இஷான் கிஷன் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -