- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. 4 வீரர்களுக்கு முதன் முறையாக அழைப்பு – முழு லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு :

இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அப்படி அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் நான்கு வீரர்களுக்கு முதல் முறையாக இந்திய டி20 அணியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில வீரர்களுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னாய், அக்ஸர் பட்டேல், ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்த வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுமுக வீரர்களாக ஹர்ஷ் தூபே, பிரப் சிம்ரன்சிங், அசோக் சர்மா, யாஷ் தாகூர் ஆகியோருக்கு முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ரிங்கு சிங் திரும்பியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை ஏன் இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை.. காரணம் சொல்லுங்க – ஹர்ஷா போக்லே கேள்வி

1) ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), 2) திலக் வர்மா, 3) வைபவ் சூர்யவன்ஷி, 4) அபிஷேக் சர்மா, 5) இஷான் கிஷன், 6) ஷிவம் துபே, 7) சூர்யான்ஷ் ஷெட்கே, 8) ரிங்கு சிங், 9) ஹர்ஷ் துபே, 10) வருண் சக்கரவர்த்தி, 11) பிரின்ஸ் யாதவ், 12) யாஷ் தாகூர், 13) அசோக் சர்மா, 14) மாயங்க் யாதவ், 15) பிரப்சிம்ரன் சிங்.

- Advertisement -