
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை அடித்த அவர் அந்த தொடரின் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதோடு 2026 ஐ.பி.எல் தொடரிலும் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது.
அதனை தொடர்ந்து அயர்லாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த சஞ்சு சாம்சன் அந்த தொடரின் முதல் போட்டியில் 5 ரன்களையும், இரண்டாவது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அவர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது அவர் நீக்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி இருந்தார்.
அதனால் இந்த இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வேளையில் இந்த இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு ஜிம்பாப்வே நாட்டிற்கு செல்லும் இந்திய அணி அங்கு நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடயிருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம் பெறாதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பிள்ளது.
இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை? என்ற விளக்கத்தை பி.சி.சி.ஐ தெரிவிக்க வேண்டும் என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில் :
இதையும் படிங்க : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம் – உண்மை காரணம் என்ன?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனின் பெயர் ஏன் இடம்பெறவில்லை? என்பதற்கான விளக்கத்தை பி.சி.சி.ஐ வழங்க வேண்டும். தேர்வு தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை என்றால் மக்கள் தாங்களாகவே பல்வேறு முடிவுகளுக்கு வந்து விடுவார்கள். சஞ்சு சாம்சன் ஏன் அணியில் இல்லை? என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஹர்ஷா போக்லே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.