- Advertisement -
ஐ.பி.எல்

பேட்டிங் செய்ய பிட்ச் நல்லா இருந்தாலும் நாங்க தோக்க இதுவே காரணம் – இஷான் கிஷன் பேட்டி

மார்ச் 28-ம் தேதியான நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : இஷான் கிஷன் பேச்சு

அதனை துரத்தி விளையாடிய பெங்களூரு அணி போட்டியின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 203 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக விளையாடிய ஆர்.சி.பி அணி ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுக்கு மத்தியில் அதிரடியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தலான வெற்றி பெற்றது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷன் கூறுகையில் : இந்த போட்டியின் முதல் மூன்று நான்கு ஓவர்களுக்கு பிறகு மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இதன் காரணமாக சற்று நிதானமாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

போட்டியின் இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய ஆடுகளம் மிகவும் ஈஸியாக இருந்தது. அதனாலே ஆர்.சி.பி வீரர்கள் வேகமாக ரன்களை குவித்தனர். அடுத்தமுறை இந்த தவறை நாங்கள் திருத்திக் கொள்ள விரும்புகிறோம். போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் கையில் இருந்தால் இன்னும் இலக்கு பெரியதாக அமைத்திருக்கலாம். அதேபோன்று விராட் கோலி சேஸிங் என்று வந்துவிட்டாலே மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த மேட்ச்சோட டர்னிங் பாயிண்ட் இதுதான்.. முதல் வெற்றிக்கு பிறகு – ரஜத் பட்டிதார் பேட்டி

அவரை போட்டியின் ஆரம்பத்திலேயே வீழ்த்த முடியவில்லை என்றால் நிச்சயம் அவரை தடுத்து நிறுத்துவது மிக கடினம். இந்த போட்டியில் நாங்கள் பல தவறுகளை செய்துள்ளோம். ஆனால் இது தொடரின் முதல் ஆட்டம் இதுதான். எனவே அடுத்த போட்டியில் நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -