நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
இந்த போட்டியின் டர்னிங் பாயிண்ட் இதுதான் : ரஜத் பட்டிதார்
சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்களையும், அனிகேத் வர்மா 43 ரன்களையும் குவித்தனர். பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குறித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 69 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 61 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவரும் மிகவும் பாசிட்டிவான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் போட்டியிலே இதுபோன்ற ஒரு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை தான் நாங்கள் இந்த சீசனில் எதிர்பார்த்தோம். அந்த வகையில் இந்த போட்டியின் முதல் ஆட்டத்திலேயே மிகச் சிறப்பாக எங்களது அணி செயல்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு மிகவும் ஒரு பாசிட்டிவான அறிகுறி.
இதையும் படிங்க : 19 ஆண்டுகள் ஒரே வீரர்.. உலகில் வேறெந்த வீரரும் செய்யாத வரலாற்று சாதனை – விராட் கோலி அசத்தல்
ஜேக்கப் டப்பி தான் விளையாடிய முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பாக பந்து வீசினார். உண்மையிலேயே அவரது பந்துவீச்சு இந்த போட்டியில் மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியது தான் இந்த போட்டியின் டர்னிங் பாயிண்ட் என வெற்றி குறித்து ரஜத் பட்டிதார் பேசியது குறிப்பிடத்தக்கது.



