ரோஹித்தும், கோலியும் கொடுத்த அந்த அறிவுரை தான் இப்போ நான் ஃப்ரீயா ஆட காரணம் – இஷான் கிஷன் பேட்டி

Ishan-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மும்பை அணியானது இம்முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புள்ளி பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்திலேயே இருந்து வருகிறது. இப்படி தொடர்ச்சியாக மும்பை அணி தோல்விகளை சந்தித்து வருவதற்கு முக்கிய காரணமாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் மெகா ஏலமானது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே மும்பை அணியில் இருந்த பல நட்சத்திர வீரர்களை வேறு வழியில்லாமல் மும்பை அணி கழட்டி விட்டதால் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் தற்போது அணியின் காம்பினேஷன் கலங்கிப்போய் இந்த நிலையில் மும்பை அணி வந்து நிற்கிறது.

Mumbai Indians MI

- Advertisement -

அதிலும் குறிப்பாக இதுவரை ஐ.பி.எல் ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து எந்த ஒரு வீரரையும் வாங்காத மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு தொடருக்காக இஷான் கிஷனை 15.25 கோடிக்கு வாங்கி இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாங்கப்பட்ட இவரால் பெரியதாக ரன் அடிக்க முடியவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 81 ரன்கள் அடித்தார்.

அது தவிர மற்ற எந்த போட்டியிலும் பெரிய அளவில் அவரால் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக மும்பை அணியுடன் சேர்ந்து அவரது பார்மும் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில போட்டிகளாக தற்போது இஷான் கிஷன் ஓரளவு சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி வருகிறார் என்று கூறலாம். இந்நிலையில் தான் இப்படி கடைசி கட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த அறிவுரை தான் காரணம் என்று இஷான் கிஷன் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

ishan
ishan MI

இதுகுறித்து அவர் கூறுகையில் : மெகா ஏலத்திற்கு பிறகு நான் விலை அதிகமாக கொடுத்து வாங்கப்பட்டதால் என் மீது சற்று அழுத்தம் இருந்தது. ஆனால் இது போன்ற தொடர்களில் அதை மனதில் வைத்து விளையாட கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நான் என் மீது நிர்ணயிக்கப்பட்ட விலையின் காரணமாக அழுத்தத்தை சந்தித்த வேளையில் என்னை சுற்றி இருந்த சீனியர் வீரர்கள் எனக்கு அறிவுரை கொடுத்தனர்.

- Advertisement -

அந்தவகையில் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் என்னிடம் வந்து ஒரு விஷயத்தை தெளிவாக கூறினார்கள். நீ அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதை பற்றி யோசிக்காதே உன்னுடைய ஆட்டத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமே சிந்தனை செய். அதில் பயிற்சி செய்து உன் ஆட்டத்தை முன்னேற்று. அதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்காதே என்று கூறியிருந்தார்கள்.

இதையும் படிங்க : நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய ஜடேஜா. வெளியான ஷாக்கிங் தகவல் – காரணம் இதுதான்

அவர்கள் கொடுத்த இந்த அறிவுரையே என்னை பெரிய அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டுவந்து எனது இயல்பான ஆட்டத்தை விளையாட வைத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இருந்து நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement