நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய ஜடேஜா. வெளியான ஷாக்கிங் தகவல் – காரணம் இதுதான்

Jadeja
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இப்படி நடப்பு சாம்பினாக இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் வீறு நடைபோட்டு பங்கேற்ற சென்னை அணி ஆரம்பகட்ட போட்டிகளிலிருந்தே பெரிய சரிவை சந்தித்தது.

CSK Ms DHoni

- Advertisement -

குறிப்பாக இத்தொடர் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதால் கேப்டன்சி அழுத்தம் காரணமாக தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுவதாக மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஜடேஜா வழங்கிவிட்டார்.

பின்னர் தோனியின் தலைமையில் தற்போது 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை அணி வெற்றி பெற்றால் கூட இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்லாது என்பதால் இனி வரும் போட்டிகளில் சரியான திறமையை கண்டறிந்து தோனி அணியை பலமாக கட்டமைத்து வருகிறார்.

Jadeja

இந்நிலையில் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி ஆல் ரவுண்டருமான ஜடேஜா விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் ஜடேஜா விளையாடாமல் இருந்த வேளையில் இந்த தொடரில் இருந்து அவர் விலக உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

மேலும் இதற்கு காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே பார்ம் அவுட் காரணமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா பீல்டிங்கிலும் மிகவும் எளிதான பல கேட்ச்களை தவறவிட்டார். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து சொதப்பி வரும் ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 3 கோல்டன் டக், முரட்டு பார்ம் அவுட், விமர்சனங்கள் ! அனைத்துக்கும் முதல்முறையாக பதிலளித்த விராட் கோலி – கூறியது இதோ

மேலும் இந்த ஓய்வின் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் பலமாக திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சென்னை அணியில் இருந்து ஜடேஜா வெளியேறி உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளிக்கும் விதமாகவே மாறும் என்று கூறலாம்.

Advertisement