- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் மீண்டும் கம்பேக் குடுத்தது, சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனானது குறித்து – இஷான் கிஷன் பேச்சு

இந்திய அணியின் இளம் நட்சத்திர இடது கை ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். அப்படி இடம்பிடித்த அவர் நியூசிலாந்து தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாடியிருந்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் 35 ரன்கள் சராசரியுடனும் 193 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 317 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.

தனது கம்பேக் குறித்து பேசிய : இஷான் கிஷன்

இப்படி இரண்டு ஆண்டுகள் கழித்து டி20 அணிக்கு கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் அடுத்ததாக இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் முதல்முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பேட்டிங் ஃபார்ம் தற்போது மிகச் சிறப்பான நிலையில் உள்ளதன் காரணமாகவே அவருக்கு இந்த பதவியை வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்தது பற்றியும், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனானது பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்ததில் நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கேப்டனாக எந்த ஒரு திட்டத்தையும் சிம்பிளாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவருமே திறமையானவர்கள். அதன் காரணமாக நிறைய யோசித்து எதையும் குழப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். நாங்கள் நல்ல ஒரு அணியாக இருக்கிறோம். எனவே நல்ல ஒரு ஆட்டத்தை இந்த சீசன் முழுவதும் வெளிப்படுத்துவோம் என்று நம்புவதாக இஷான் கிஷன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

2026 டி20 உலக கோப்பை நடைபெற்று முடிந்த இந்த சில நாட்கள் என்னுடைய வாழ்நாளில் மிகச் சிறப்பான நாட்களாக நினைக்கிறேன். ஏனெனில் திடீரென அணிக்குள் கம்பேக் கொடுத்து உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்று இருந்ததெல்லாம் மிகச்சிறந்த தருணம். ஆனால் அதற்கு பின்னால் அதிகளவு கடின உழைப்பினை நான் வெளிப்படுத்தி உள்ளேன்.

இதையும் படிங்க : தோனி கிட்ட ஸ்ட்ரெய்ட்டா பேசுவேன்.. ஆனா மீடியா உங்ககிட்ட அதை பத்தி சொல்லமாட்டேன் – கங்குலி நச் பதில்

கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக விளையாடி மீண்டும் இந்த கம்பேக் வாய்ப்பை பெற்றுள்ளேன். இந்திய அணியில் நான் இடம்பெறாத போது இருந்த வருத்தத்தை குறித்து பேச வார்த்தைகள் இல்லை. ஆனால் தற்போது எல்லாம் மாறி நான் இந்திய அணியுடன் இணைந்து விளையாடுவதில் மகிழ்ச்சி என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -