அறிமுக போட்டியிலேயே யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய இஷான் கிஷன் – குவியும் வாழ்த்துக்கள்

Ishan-3
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் எளிதாக 263 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த இளம் வீரரான இஷான் கிஷன் இதுவரை இந்திய வீரர்களில் யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

ishan 1

- Advertisement -

அதன்படி தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டிய அவர் 42 பந்துகளை சந்தித்த நிலையில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதில் அவர் படைத்த சாதனை யாதெனில் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்ததன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாரும் பார்க்காத உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

ishan 4

இதன்மூலம் அறிமுக போட்டியிலேயே டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய இரண்டு வடிவங்களிலும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் தற்போது படைத்துள்ளார். உலகளவில் இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீரராகவும் அவர் திகழ்கிறார். அவரது இந்த சாதனைக்காக தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ishan 5

மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து இதே போன்று சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement