க்ருனால் பாண்டியாவை எதிர்த்து விளையாடுறது கஷ்டம் ஏன் தெரியுமா ? – இஷான் கிஷனின் பதிலை கலாய்த்த ரசிகர்கள்

Ishan-kishan

கொரானா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்தி வைப்பட்டிருந்த ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது பிசிசிஐ. இந்த அறிவிப்பு வெளியானதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும், தற்போது ஒருவர் பின் ஒருவராக அந்த அணி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடியாக கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனிடம், வலைப்பயிற்சியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் எந்த இரு பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட நீங்கள் சிரமப்பட்டீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

Ishan kishan

அதற்கு பதிலளித்த அவர், முதல் பௌலராக ஜாஸ்பிரித் பும்ராவின் பெயரைச் சொன்னார். ஜாஸ்பிரித் பும்ரா உலகிலேயே தலைசிறந்த பந்து வீச்சாளர் என்பதால் அவரின் பெயரை சொன்னது பெரிய ஆர்சர்யமான விடயம் கிடையாது. ஆனால் இரண்டாவது பௌலராக க்ருணால் பாண்டியாவை தேர்ந்தெடுத்த இஷான் கிஷான், ஏன் க்ருணால் பாண்டியாவை தேர்ந்தெடுத்தார் என்ற காரணத்தை கூறிய போதுதான் ஆச்சர்யாமாக இருந்தது. க்ருணால் பாண்டியாவின் பந்து வீச்சைப் பற்றி பேசிய அவர்,

- Advertisement -

நான் இரண்டாவது பௌலராக க்ருணால் பண்டியாவை தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர் மிகவும் ஸ்லோவாக பந்து வீசுகிறார். நான் கற்பனை செய்துகூட பார்க்காத அளவிற்கு ஸ்லோவாக வீசுகிறார். அவர் வீசும் பந்து என்னை அடைவதற்கு முன்னதாக நான் இரண்டு முறை என் பேட்டை சுழற்றிவிடுவேன். அவ்வளவு குறைந்த வேகத்தில் அவர் பந்து வீசுவதால், அவருடைய பந்துகளை ஆட நான் சிரமப்பட்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். க்ருணால் பண்டியா சுழல் பந்து வீச்சிலேயே அதிவேகமாக பந்து வீசக் கூடிய இயல்பு உடையவர்.

krunal 2

அவர் இவ்வளவு ஸ்லோவாக பந்து வீசுவார் என்று இஷான் கிஷான் சொல்வதைக் கேட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள், அந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில் தங்களது ஆச்சர்யத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

- Advertisement -

Krunal

இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான இஷான் கிஷான் அந்த போட்டியில் அற்புதமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்த ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அவருக்கு, ஜூலை மாதம் இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்பேட்ஸ்மேன் வரிசையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement