- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தால் இஷான் கிஷனுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கேப்டனாக பதவியேற்ற சுப்மன் கில் எவ்வாறு செயல்படுவார்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது கேப்டன்சி இங்கிலாந்து தொடரில் அசத்தும் படியே இருந்தது.

இஷான் கிஷனுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு :

அதனை தொடர்ந்து தற்போது இந்திய மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் முதல் முறையாக கேப்டனாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறார். இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட்டால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து தொடரின் போது கால் பகுதியில் காயமடைந்த ரிஷப் பண்ட் அந்த காயத்திலிருந்து மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிக்க மாட்டார் என்று தெரிகிறது.

அதேவேளையில் ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த காயத்தால் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனுக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இஷான் கிஷன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பும் வாய்ப்பை பெறவுள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ள இஷான் கிஷன் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நிரந்தர இடம் இல்லாமல் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 39 வயதில் சர்வதேச அரங்கில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய சிக்கந்தர் ராசா – விவரம் இதோ

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் அடுத்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டனாக கே.எல் ராகுல் செயல்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

- Advertisement -