- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிறப்பான கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்று டி20 தரவரிசையிலும் முன்னேற்றம் கண்ட – இஷான் கிஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வீரரான இஷான் கிஷன் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்தார். பின்னர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார்.

தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இஷான் கிஷன் :

அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4 ஆட்டங்களில் விளையாடிய இஷான் கிஷன் 207 ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி கடைசி போட்டியில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

அதோடு 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு தொடக்க வீரருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்றி தற்போது ஐசிசி டி20 தரவரிசை பட்டியலிலும் அவர் நல்ல முன்னேற்றமும் கண்டுள்ளார்.

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அண்மையில் வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 32 இடங்கள் முன்னேறியுள்ளார். தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து நல்ல முன்னிலையுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த 2 பேர் போதும்.. எங்களுக்கு தான் டி20 வேர்ல்டு கப்.. அதுல மாற்றமே இல்லை – பேட் கம்மின்ஸ் பேட்டி

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் முன்னேறி இந்த தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். எதிர்வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் இஷான் கிஷன் நிச்சயம் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடியான துவக்கத்தை அளிப்பார் என்று பலரும் அவரது ஆட்டத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -