வீடியோ : சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரளவைத்த இஷான் கிஷன் – ஷாக்கான ட்ரெஸ்ஸிங் ரூம்

Ishan 6
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று கொழும்பு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணி நிர்ணயித்த 263 ரன்களை 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இளம் வீரர் இஷான் கிஷன் திகழ்ந்தார்.

ishan 1

- Advertisement -

42 பந்துகளை சந்தித்து அவர் இரண்டு சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தனது ஒருநாள் கிரிக்கெட்டை சிறப்பாக அவர் துவங்கியுள்ளார். ஆறாவது ஓவரின் 4வது பந்தில் அவர் அடித்த சிக்ஸரை பார்த்து இந்திய வீரர்கள் அனைவரும் திகைத்தனர் என்றே கூறலாம்.

ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டின் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே பயமின்றி அவர் அடித்த இந்த ஷாட்டை பார்த்து நிச்சயம் அனைவரும் வியந்திருப்பார்கள். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் பயமின்றி விளையாடி அரைசதம் கடந்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஒருநாள் போட்டியிலும் அவர் அரைசதத்தை கடந்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக அடுத்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாகவும் இவர் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 23 வயதேயான இளம் வீரரான இவர் நிச்சயம் விக்கெட் கீப்பராக இல்லை என்றாலும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதை இந்த ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார். அவர் அடித்த சிக்சர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement