4 ஆவது டி20 போட்டி : இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் ? – கோலி கொடுத்த விளக்கம்

Ishan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது டி20 போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே தொடரின் முடிவை தீர்மானிக்கும் 4 ஆவது முக்கியமான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

indvseng

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த போட்டியின் போது மூன்றாமிடத்தில் ஆடிய இஷான் கிஷன் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மூன்றாவதாக களமிறங்கி விளையாடினார். இந்த தொடரின் 2வது போட்டியின்போது அறிமுகமான இஷன் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே துவக்க வீரராக அசத்தலான அரை சதமடித்து சிறப்பான பார்மில் உள்ளார்.

ishan 1

மேலும் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்ற இவரை தொடர்ச்சியாக விளையாட வைக்காமல் இன்று கோலி ஏன் அணியில் இருந்து நீக்கினார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டாசின் போதே பதிலளித்த விராட் கோலி : இஷான் கிஷன் இன்று இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் வாய்ப்பினை பெறுகிறார் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

sky 2

அதன்படி வாய்ப்பினைப் பெற்ற சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மட்டுமின்றி 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.