என்னுடைய இந்த ஆட்டநாயகன் விருதை நான் இவருக்கு சமர்ப்பிக்கிறேன் – இஷான் கிஷன் நெகிழ்ச்சி

Ishan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-1 என்ற கணக்கில் சம நிலையை அடைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரராக அறிமுகமான இஷன் கிஷன் திகழ்ந்தார். 32 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 56 ரன்களை அடித்து அசத்தினார்.

ishan 2

- Advertisement -

அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டி முடிந்து அவரின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேட்டியளித்த இஷான் கிஷன் கூறுகையில் : முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடுவது என்பது எப்போதும் எளிதானதல்ல. மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஏராளமான மூத்த வீரர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். அவர்கள் எனக்கு நிறைய அறிவுரை கொடுத்து இருக்கிறார்கள். ரிவர்ஸ் ஸ்வீப் எப்போதும் நான் சிறப்பாக விளையாடுவேன். ஆனால் இம்முறை அப்படி விளையாடி அவுட்டானது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டாம் கரன் வீசிய பந்தை சிக்சருக்கு அடித்தபோது இந்த போட்டியின் மீது எனக்கு நம்பிக்கை பிறந்தது.

ishan 2

அதன் பின்பு நான் என்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நான் இந்த இடத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஆட்டத்தில் என்னுடைய சிறப்பான திறன்களை கொண்டு வந்தேன். என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை என்னுடைய பயிற்சியாளரின் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பயிற்சியாளரின் தந்தை சில நாட்களுக்கு முன்னரே காலமானார்.

ishan 1

எனவே அவருக்காக இந்த இன்னிங்சை சமர்ப்பிக்கிறேன். இந்த போட்டிக்கு முன்பாக அவர் என்னிடம் குறைந்தபட்சம் 50 ரன்கள் ஆவது எனது தந்தைக்காக அடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனவே இந்த ஆட்டத்தை நான் எனது பயிற்சியாளரின் மறைந்த தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என இஷான் கிஷன் நெகிழ்ச்சியாக கூறியது குறிப்பிடத்தக்கது..

Advertisement