நம்பர் ஒன் இடத்துக்காக சந்தோசப்படாதீங்க, நம்மிடம் இன்னும் அந்த வீக்னெஸ் இருக்கு – 2023 உ.கோ’க்கு முன் எச்சரித்த இர்பான் பதான்

Pathan-1
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அடுத்தடுத்த தொடர்களில் ஒயிட் வாஷ் வெற்றிகளை பெற்றது. அதனால் தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ள இந்தியா 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை நிச்சயமாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் இருந்தாலும் முழுமையான நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த வருடம் இதே போலவே டி20 கிரிக்கெட்டில் சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்ட இந்தியா 2016க்குப்பின் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

ஆனால் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி மீண்டும் வெறும் கையுடன் வெளியேறியது. தற்போதும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதேபோல இருதரப்பு தொடர்களை வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ள இந்தியா கடந்த வருடத்தை போலவே செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஒருபுறம் கலக்கமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் இப்போதும் பந்து வீச்சுத் துறை முக்கிய தருணங்களில் சொதப்பலாக செயல்பட்டு சில தருணங்களில் வெற்றிகளை தாரை வார்த்து வருகிறது.

வீக்னெஸ் இருக்கு:
இந்நிலையில் அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களை வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியதற்காக மகிழ்ச்சியடைய வேண்டாம் என்று இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர் இர்பான் பதான் இப்போதும் நமது பந்து வீச்சு சுமாராக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா தங்களுடைய பந்து வீச்சில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எந்த மாதிரியான மைதானங்களுக்கு எந்த வகையான பவுலர்களை பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்கள் பிட்ச்சை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் முக்கியமாகும்”

Bracewell

“மேலும் தற்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் இங்குள்ள பிட்ச்கள் பிளாட்டாக இருக்கும் நிலையில் இந்திய புலவர்கள் அதற்கு தகுந்தார் போல் பந்து வீச முடியாமல் தடுமாறுகிறார்கள். அதை கடந்த 2 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான செமி பைனலில் நாம் பார்த்தோம். எனவே நமது பவுலிங் தடுமாறுகிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. அதனால் விரைவில் குறிப்பிட்ட வகையான பிட்ச்களில் மட்டும் அசத்தும் பவுலர்களை விட அனைத்து வகையான ஆடுகளங்களிலும் அசத்தக்கூடிய 2 பவுலர்கள் நமக்கு தேவைப்படுகிறது”

- Advertisement -

“அவர்களிடம் தேவையான வேரியேஷன் அல்லது வேகம் இருக்க வேண்டும். அதை ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் தான் கவனிக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக திகழும் முகமது ஷமி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தனது மணிக்கட்டில் சில வேரியேஷன் செய்ய துவங்கியதும் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 3 விக்கெட்களில் 2 விக்கெட்டுகளை முதல் ஸ்பெல்லில் எடுத்தார். அதன் பின் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய மைக்கேல் பிரேஸ்வெலை பவுன்சர் பந்தால் காலி செய்தார்”

Irfan-pathan

“அந்த வகையில் அவர் பிட்ச்சை பயன்படுத்தி சூழ்நிலைக்கேற்றார் போல் கோணத்தை மாற்றி விக்கெட்டை எடுத்தார். எனவே அது போன்ற ஒவ்வொரு விக்கெட்டுகளும் முக்கியமாகும். நீண்ட நாட்களுக்கு பின்பு அவரும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 2 டி20 உலக கோப்பைகளில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் இந்தியா தோற்றது.

இதையும் படிங்க: நீங்க அதுல முன்னேறினால் தான் இந்தியா ஜெயிக்க முடியும் – விராட் கோலிக்கு சௌரவ் கங்குலி முக்கிய அட்வைஸ்

மேலும் சமீபத்திய வங்கதேச தொடரில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் வெற்றி உறுதியான மிதப்பில் அஜாகிரதையாக செயல்பட்ட இந்திய பவுலர்கள இறுதியில் வெற்றியை தாரை பார்த்தனர். அத்துடன் நடைபெற்ற முடிந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கும் அளவுக்கு பவுலிங் சுமாராகவே இருந்தது. எனவே பேட்டிங்கை விட பந்து வீச்சுத் துறையில் இந்தியா முன்னேறுவது மிகவும் அவசியமாகிறது.

Advertisement