நீங்க அதுல முன்னேறினால் தான் இந்தியா ஜெயிக்க முடியும் – விராட் கோலிக்கு சௌரவ் கங்குலி முக்கிய அட்வைஸ்

Ganguly
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றால் தான் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஃபைனல் வாய்ப்பை ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்த இந்தியாவை பழி தீர்க்க போராட உள்ளது.

AUs vs IND

- Advertisement -

இருப்பினும் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2012க்குப்பின் கடந்த 10 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. எனவே இம்முறையும் சிறப்பாக செயல்பட்டு வென்று பைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய ஸ்பின்னர்கள் பந்து வீச்சு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் பேட்டிங் துறையில் இந்தியாவின் வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் அவசியமாகிறது.

கங்குலியின் அட்வைஸ்:
ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரிடத்தில் அற்புதமாக செயல்பட்டு நிறைய ரன்களையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி புஜாரா போன்ற இதர வீரர்கள் தாண்டி பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவர் ஒரு வழியாக கடந்த 2022 ஆசிய கோப்பையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு வெற்றிக்கு போராடினார்.

அதே வேகத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்களில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ள அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019க்குப்பின் சதத்தை பதிவு செய்யவில்லை. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பார்முக்கு திரும்பிய அவர் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்வதற்கு விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் அவசியம் என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அதற்கு அவர் தன்னுடைய பேட்டிங்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஏற்கனவே பைனல் வாய்ப்பை ஆஸ்திரேலியா உறுதி செய்து விட்ட நிலையில் இத்தொடரில் இந்தியா வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோதும் என்று நம்புவதாக தெரிவிக்கும் கங்குலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Ganguly-1

“ஆம் நிச்சயமாக சமீபத்திய இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடர்களில் அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அவர் முன்னேற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா தனது வெற்றிக்கு அவரை மிகவும் நம்பி இருக்கிறது. மறுபுறம் வலுவான ஆஸ்திரேலிய அணி சவாலை கொடுக்கும் என்பதால் இத்தொடர் சரவெடியாக இருக்கும் என்று நம்புகிறேன். இத்தொடரில் இரு அணிகளுமே கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் 2 அணிகளுமே தரமானதாக உள்ளன. மேலும் இந்த 2 அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகளும் உள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: கோச்சிங்னா என்ன, நான் ஏன் உங்க பேச்சை கேட்கணும்? அடம் பிடித்த இந்திய வீரர் பற்றி மனம் திறந்த முன்னாள் கோச் ஸ்ரீதர்

அவர் கூறுவது போல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்குள் 46 சதங்களை அடித்து விட்ட விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களிலேயே இருக்கிறார். எனவே இந்த தொடர் மட்டுமல்லாது இயற்கையாகவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியமாவது குறிப்பிடத்தக்கது.

Advertisement