கோச்சிங்னா என்ன, நான் ஏன் உங்க பேச்சை கேட்கணும்? அடம் பிடித்த இந்திய வீரர் பற்றி மனம் திறந்த முன்னாள் கோச் ஸ்ரீதர்

Sridhar
- Advertisement -

2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2017 முதல் 2021 வரை 3 வகையான இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக செயல்பட்டு இருதரப்பு தொடர்களில் வெளிநாடுகளில் நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அந்த காலகட்டங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்து முழு பிட்னஸ் தகுதியுடன் ஃபீல்டிங் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஒரு முக்கிய காரணமானவர் என்றால் மிகையாகாது. கடந்த 2014இல் டங்கன் பிளேட்சர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற போது பொறுப்பேற்றுக் கொண்ட அவர் அதன் பின் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோரது தலைமையில் 2021 வரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு விடை பெற்றார்.

அதற்கு முன்பாக அண்டர்-19 இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்ட அவர் மிகுந்த அனுபவம் மிகுந்த பயிற்சிகளில் ஒருவர் என்றும் பாராட்டலாம். அப்படி இந்தியாவுக்காக 7 வருடங்கள் பயிற்சியாளராக செயல்பட்ட அவர் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தவர். ஆனால் அதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டும் கோச்சிங் என்றால் என்ன, உங்களது பயிற்சியை நான் ஏன் கேட்க வேண்டும், என்னுடைய ஸ்டைலில் விளையாட கூடாதா என ஆரம்பத்திலேயே தம்மிடம் கேள்விகளை எழுப்பியதாக ஸ்ரீதர் கூறியுள்ளார்.

- Advertisement -

நான் ஏன் கேட்கணும்:
தனது ஓய்வுக்கு பின் வர்ணையாளராக செயல்பட்டு வரும் அவர் தன்னுடைய கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் கேரியர் பற்றி “கோச்சிங் பியாண்ட் – மை டேஸ் வித் இந்தியன் கிரிக்கெட்” என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் இந்திய அணியினருடன் இருந்த பல சுவாரஸ்யமான ரசிகர்கள் அறியாத தருணங்களை பதிவிட்டுள்ள அவர் அஷ்வின் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“இந்திய அணியில் நான் முதல் முறையாக இணைந்த முதல் வாரத்தில் அஷ்வின் என்னுடன் பேசிய தருணங்கள் இன்னும் எனது நினைவில் உள்ளது. அப்போது அவர் முரண்படாமல் என்னிடம் “ஸ்ரீதர் சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் ஏன் உங்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் பரிந்துரைக்கும் பீல்டிங் பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்? நீங்கள் என்னிடம் கேட்பதை நான் ஏன் செய்ய வேண்டும்? ஏனெனில் 2011 முதல் 2014 வரை ட்ரேவர் பென்னி இந்திய அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இப்போது வந்துள்ள நீங்கள் 2 – 3 வருடங்களில் வெளியே செல்லலாம்”

- Advertisement -

“அப்போது ஒரு புதிய பீல்டிங் பயிற்சியாளர் வருவார். நான் நேர்மையாக இருந்தால் அடுத்த 3 வருடங்களில் எனக்கு நிறைய விளைவுகள் ஏற்படலாம். எனவே நீங்கள் சொல்வது எனக்கு வேலை செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது எனது விளையாட்டுக்கு உதவ வேண்டும். இல்லையெனில் நான் ஏன் உங்கள் பேச்சை கேட்க வேண்டும்” என்று கேட்டார். நாங்கள் அதற்கு முன்பாகவே பழகியிருந்ததால் அவர் இப்படி என்னிடம் வெளிப்படையாக பேசினார்”

“அதனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நான் உடனடியாக புரிந்து கொண்டேன். அவர் என்னிடம் “நான் அவருக்கு எவ்வளவு பயிற்சிகளை கொடுப்பேன்? பயிற்சி என்றால் என்ன” என்பதை கேட்க விரும்பினார்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது தற்போது வந்துள்ள நீங்கள் ஒரு மாதிரியான பயிற்சி கொடுத்து விட்டு சென்று விடுவீர்கள். ஆனால் மற்றொரு பயிற்சியாளர் வந்தால் அவரது ஸ்டைலில் பயிற்சியை கொடுக்கும் போது நான் எதை பின்பற்றுவது என்ற வகையில் அஷ்வின் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs NZ : இன்றைய முதலாவது டி20 போட்டி எப்போது துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

பொதுவாக ஒரு குரு சொல்வதை மாணவன் எதுவாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதே வழக்கமாகும். ஆனால் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க கூடிய ரவிச்சந்திரன் அஷ்வின் பயிற்சியாளரிடமே பயிற்சி என்றால் என்ன என்று தைரியமாக பேசியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

Advertisement