IND vs NZ : இன்றைய முதலாவது டி20 போட்டி எப்போது துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

Pitch
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 ஒருநாள் போட்டிகளிலுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இந்திய அணியானது அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Shardul Thakur

- Advertisement -

ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணியானது இம்முறை டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதேபோன்று இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பிடிக்காத வேளையில் இளம் வீரர்களைக் கொண்ட ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாடிருப்பதனால் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Ranchi Cricket Stadium Ground

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த முதலாவது டி20 போட்டி எங்கு நடக்கிறது? எப்போது துவங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த சில தகவல்களை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜனவரி 27-ஆம் தேதி இன்று இரவு சரியாக ஏழு (7) மணிக்கு டாஸ் போடப்பட்டு ஏழு முப்பது (7.30) மணிக்கு துவங்க உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : நான் எதற்கும் பயப்பட மாட்டேன், அந்த ஜாம்பவானோட இடத்தை கண்டிப்பா நிரப்புவேன் – இஷான் கிசான் அதிரடி பேட்டி

இந்த போட்டியினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் கண்டு களிக்கலாம். மேலும் ஆன்லைன் வழியாக காண விரும்புவோர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலம் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement