தோனியால் இவங்களுக்கு பெரிய பிரச்சனை காத்திருக்கு. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க – இர்பான் பதான் எச்சரிக்கை

pathan 1
- Advertisement -

தோனி திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். 39 வயதான தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டியிலும், 98 டி20 போட்டியிலும் ஆடி இருக்கிறார். இதில் பெரும்பாலும் இந்திய அணியின் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்து ஆடியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய தோனி பல போட்டிகளை அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

Sachin

- Advertisement -

இந்நிலையில் ஓய்வினை அறிவித்துவிட்டு இந்த வருடம் ஐபிஎல் தொடர்பாக தற்போது தயாராகி வருகிறார் தோனி. இனி ஆடுகளத்தில் அவருக்கு அழுத்தம் என்பது இருக்காது. இருந்தாலும் சமீப கால காட்சிகளை பார்க்கும்போது ஒரு சில அழுத்தத்திலிருந்து தான் ஓய்வினை அறிவித்துள்ளார் என்று தெரிகிறது. 39 வயது ஆகிவிட்டது, எப்படி மீண்டும் சர்வதேச போட்டியில் ஆடுவது, கரோனா வைரஸ் வந்துவிட்டது.

இதனால் தற்போது ஓய்வு அறிவித்து விட்டதால் இதில் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விட்டது. நாம் இத்தனை வருட காலம் பார்த்த தோனிக்கும் இந்த தோனிக்கு மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான்.

Dhoni

ஐபிஎல் தொடரில் தோனியை அடித்துக்கொள்ள முடியாது. என்னை போன்ற பந்துவீச்சாளர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள் .இனி நாங்கள் தோனிக்கு பந்து வீச வேண்டியதில்லை. அதுவரை எங்களுக்கு மகிழ்ச்சியே. இந்த ஐ.பி.எல் தொடரில் எந்த ஒரு கம்மிட்மெண்டும் இல்லாதால் தோனி புல் புலோவில் பேட்டை சுழற்ற காத்திருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் தற்போது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு தனது மொத்த அதிரடியையும் காட்டப் போகிறார் தோனி. நான் அவருக்கு பந்துவீச போவதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் வேறுவிதமான தோனியை பார்க்க போகிறீர்கள் , நிச்சயம் தோனிக்கு எதிராக பந்துவீச இருக்கும் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.

csk

இவர் கூறியதை போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக அருமையாக ஆடிவருகிறார் தோனி. சென்ற வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் இவர் தான். இந்த வருடம் வெளிநாட்டில் நடைபெறுகிறது. இங்கும் தோனி தனது ருத்ர தாண்டவத்தை காட்டுவார் என்று எதிர்பார்ப்போம்.

Advertisement