IPL 2023 : பாண்டிங்க்கு இந்திய வீரர்களின் சைக்காலஜி தெரியாது, அந்த இந்திய ஜாம்பவானை டெல்லியின் கோச்’சா போடுங்க – இர்பான் பதான்

irfan-pathan
- Advertisement -

கோடைகாலத்தில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டிடுள்ளது. அதில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் களமிறங்கியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முன்பை விட மும்மடங்கு போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் அதில் தங்களுடைய லட்சிய கனவு முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து ஆரம்பம் முதலே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

DC

- Advertisement -

அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறிய நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்து 2016 கோப்பையை வென்ற அனுபவம் வாய்ந்த டேவிட் வார்னர் தலைமை தாங்கினார். அவருக்கு உறுதுணையாக 2 உலகக் கோப்பைகளை வென்ற வரலாற்றின் மகத்தான கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்தியாவின் தரமான கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் பயிற்சியாளராகவும் இயக்குனராகவும் இருந்ததால் டெல்லி வெற்றி நடை போடும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

பயிற்சியாளரை மாத்துங்க:
ஆனால் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்த போதிலும் பேட்டிங் துறையில் பிரிதிவி ஷா, மிட்சேல் மார்ஷ் போன்ற முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தில் டேவிட் வார்னர் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல் லோயர் மிடில் ஆர்டரில் அக்சர் படேல் தவிர்த்து வேறு யாரும் சிறப்பாக செயல்படாததால் தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி டெல்லி டேர்டெவில்ஸ் என்ற தன்னுடைய பழைய பெயருக்கேற்றார் போல் மோசமாக செயல்பட்டது.

அதனால் களத்தில் செயல்படும் வீரர்கள் சுமாராக செயல்பட்டால் ரிக்கி பாண்டிங், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியளராக இருந்தும் எந்த பயனுமில்லை என்று சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்திய கால சூழ்நிலைகளில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களை ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கும் இர்ஃபான் பதான் இன்றைய இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு அன்றே விதை விதைத்த சௌரவ் கங்குலி டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெல்லி அணியில் சௌரவ் கங்குலி இருப்பது பெரிய விஷயமாகும். ஒருவேளை டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பும் தாதாவிடம் (கங்குலி) ஒப்படைக்கப்பட்டால் அவர் நிச்சயமாக அந்த அணியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். ஏனெனில் அவருக்கு தான் இந்திய வீரர்களின் மனநிலை (சைக்காலஜி) பற்றி நன்றாக தெரியும். அவருக்கு அணியையும் உடைமாற்றும் அறையையும் எப்படி நடத்த வேண்டும் என்பது நன்கு தெரியும். அதை டெல்லி நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”

Irfan-pathan

“மேலும் கடந்த போட்டியில் டாஸ் வென்ற போது அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக டேவிட் வார்னர் தெரிவித்தார். அப்படிப்பட்ட நிலையில் அடுத்த வருடம் டெல்லி அணியில் கங்குலியின் பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டால் அது தவறானதாக இருக்காது” என்று கூறினார். அவர் கூறுவது போல தற்போதைய நிலைமையில் வீரர்களை நிர்வகித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் இயக்குனர் வேலையை மட்டுமே கங்குலி செய்து வருகிறார்.

- Advertisement -

மறுபுறம் டாஸ் வென்றால் என்ன முடிவு, எந்த வீரர்களை தேர்வு செய்வது, பயிற்சிகளை கொடுப்பது போன்ற முக்கிய வேலைகளை பயிற்சியாளராக பாண்டிங் செய்து வருகிறார். இருப்பினும் இந்த சீசனில் பகல் நேரத்தில் நடைபெற்ற போட்டிகளில் டாஸ் வென்றும் சேசிங் செய்ய முடிவை டெல்லி எடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:வீடியோ : கேட்ச், ரன் அவுட் எல்லாம் மிஸ் – காமெடி செய்த டெல்லி – 4 அல்வா அதிர்ஷ்ட சான்ஸ் கிடைத்தும் சொதப்பிய பஞ்சாப்

அத்துடன் அக்சர் படேல் மேல் வரிசையில் களமிறங்காதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. எனவே இந்திய கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் தன்மையையும் அறிந்த கங்குலி பயிற்சியாளராக வந்தால் அது போன்ற விஷயங்களில் டெல்லியை சரியாக வழி நடத்துவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement