ஓப்பனிங் தரலனாலும் பரவால்ல.. சாம்சனுக்கு ஆசியக் கோப்பையில் அந்த வாய்ப்பை கொடுங்க.. இர்பான் பதான்

Irfan Pathan 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க தயாராகி வருகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் பிளேயிங் லெவனில் அவர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட உள்ளார் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது.

ஏனெனில் சமீப காலங்களில் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். தென்னாப்பிரிக்காவில் 2 சதங்கள் அடித்த திலக் வர்மா 3வது இடத்தை தனதாக்கியுள்ளார். 4வது இடத்தில் வழக்கம் போல கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்குவார்.

- Advertisement -

ஓப்பனிங் தரலனாலும் பரவால்ல:

மிடில் ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகிய ஆல் ரவுண்டர்கள் விளையாடுவார்கள். மறுபுறம் சஞ்சு சாம்சன் கடந்தக் காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறினார். அதனால் ஓப்பனிங்கில் களமிறக்கப்பட்ட அவர் மொத்தம் 3 சதங்கள் அடித்து ஒரு வழியாக சிறப்பாக விளையாடத் துவங்கினார். ஆனால் தற்போது சுப்மன் கில் வந்துள்ளதால் இந்திய அணி சாம்சனை பெஞ்சில் அமர வைக்கத் தயாராகியுள்ளது.

2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்ல மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக விளையாட வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பையில் ஓப்பனிங் இல்லாவிட்டாலும் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை சஞ்சு சம்சானுக்கு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சாம்சன் விளையாடனும்:

“பிளேயிங் லெவனில் சஞ்சு இடம் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் சாம்சன் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய சில ஆட்டத்தின் வீடியோ பதிவுகளை நான் பார்த்தேன். எனவே அவரால் மிடில் ஆர்டரில் விளையாட முடியுமேயானால் ஏன் பிளேயிங் லெவனில் இருக்கக்கூடாது? அவரை 5வது இடத்தில் விளையாட வையுங்கள்”

இதையும் படிங்க: 39 வயதில் சர்வதேச அரங்கில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய சிக்கந்தர் ராசா – விவரம் இதோ

“அப்படி நடந்தால் ஜிதேஷ் சர்மா அணியில் இருக்க மாட்டார். சிறப்பாக செயல்பட்டுள்ள சாம்சனை கழற்றி விடுவது கடினமாக இருக்கும் அல்லவா? அதே சமயம் சில நேரங்களில் சதத்தை அடித்த அவர் மற்ற நேரங்களில் சுமாராக அவுட்டாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனால் தொடர்ச்சியாக அசத்துவதில் அவரிடம் கேள்வி இருக்கிறது. இருப்பினும் அவர் நன்றாகவே செயல்பட்டுள்ளார். கொஞ்சம் பவுலிங் செய்யும் திறன் கொண்டுள்ள அபிஷேக் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளதாலும் நம்பர் ஒன் இடத்திலும் இருப்பதாலும் நிச்சயம் விளையாடுவார்” என்று கூறினார்.

Advertisement