டெஸ்ட் போட்டியில் கோலி இல்லனா இவரை கேப்டனா ஆக்குங்கள். இவரே சரியா இருப்பாரு – இர்பான் பதான் கணிப்பு

நவம்பர் 10ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் முடிவடைகிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஐபிஎல் தொடரில் விளையாட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் குழு ஆகிய அனைவரும் துபாய் சென்று விட்டனர்.

Ind

மொத்தமாக அனைவரும் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். இதற்காக மூன்று விதமான அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் ஜனவரி 15ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார் என்று செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக விராட் கோலி இல்லாத நேரத்தில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு யாரை கேப்டனாக நியமிப்பது ? என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது இருந்து யோசித்து வருகிறது. ஏனெனில் அவருக்கு அடுத்தபடியாக சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு மிகப்பெரிய வீரரும் இல்லை.
துணைக்கேப்டன் ரஹானே மட்டுமே இருக்கிறார். அவர் தான் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார்.

ind-2

இந்நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ….. கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம் என்று விராட் எடுத்திருந்த முடிவு நல்லது. அதனை நாம் மதிக்க வேண்டும் விராட் கோலி இடத்தை இந்திய அணியில் நிரப்புவது கடினம்.

- Advertisement -

Ind-1

ஆனால், அவர் ஆடாத போட்டிகளில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக இணைக்கப்பட வேண்டும். இதற்கு எதிராக எதுவும் பேசவில்லை ரோஹித் ஏற்கனவே தன்னை ஒரு மிகச் சிறந்த கேப்டனாக நினைத்துவிட்டார். அனுபவம் வாய்ந்த வீரர் இதன் காரணமாக அவரை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.