இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 18 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்றதால் வெகு விரைவாகவே அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஆனாலும் அவரது மோசமான ஃபார்ம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றால் வெகுவிரைவிலேயே வந்த வேகத்திலேயே அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இம்முறை வாய்ப்பை தவற விடாதீங்க : இர்பான் பதான் அறிவுரை
பின்னர் பல ஆண்டுகள் ஆகியும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருந்து வரும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் மும்பை அணியால் புறக்கணிக்கப்பட்டு தற்போது வேறு ஒரு அணியில் இணைந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
அதுமட்டும் இன்றி ஐபிஎல் போட்டிகளிலும் கடந்து 2024-ம் ஆண்டுக்குப் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 13 ரன்கள் சராசரியுடன் வெறும் 106 ரன்களை மட்டுமே குவித்தார். அதற்கு அடுத்து 2024 ஐபிஎல் தொடரில் 8 போட்டியில் விளையாடிய அவர் 198 ரன்களை மட்டுமே குவித்தார்.
இப்படி அடுத்தடுத்த மோசமான சீசன்கள் காரணமாக 2025 மெகா ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் வாங்கவில்லை. அதனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர் எதிர்வரும் 2026 ஐ.பி.எல் தொடருக்காக 75 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலையுடன் ஏலத்தில் போட்டியிடுகிறார்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் அவர் ஏதாவது ஒரு அணிக்கு விலை போனால் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா போன்ற ஒரு திறமையான இளம்வீரரை பார்க்கும் போது அவர் சீக்கிரம் அவரை நிரூபிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க : நான் அதுக்கும் தயார்.. மினி ஏலத்திற்கு முன்னதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேமரூன் கிரீன் – விவரம் இதோ
ஏனெனில் திறமை வாய்ந்த வீரரான அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டு இந்த வாய்ப்பை விடக்கூடாது என்றும் தோன்றுவதாக ப்ரித்வி ஷாவுக்கு அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.



