- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜிதேஷ் சர்மா விடயத்தில் நிர்வாகம் செய்தது தவறு.. டி20 உலககோப்பை அணித்தேர்வு குறித்து – இர்பான் பதான் கேள்வி

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி பி.சி.சி.ஐ-யின் மூலம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

ஜிதேஷ் சர்மா விடயத்தில் நிர்வாகம் செய்தது தவறு : இர்பான் பதான் கருத்து

அதனைத்தொடர்ந்து தற்போது அனைத்து அணிகளும் இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தங்களது அணியின் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ-யும் இன்று டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களின் முழு பட்டியல் வெளியாகி இருந்தது. இந்த பட்டியலில் துணை கேப்டன் சுப்மன் கில் மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒரு விடயம் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்ற வேளையில் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு இருப்பது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பிளஸ் ஃபினிஷர் ரோலில் விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமாக செயல்பட்டு வந்தார். அதனால் நிச்சயம் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் குறிப்பிட்டதாவது : ஜிதேஷ் சர்மா இந்நேரம் நான் என்ன தப்பு செய்தேன்? என்னை அணியில் இருந்து ஏன் நீக்கிவிட்டார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பார் அவரது விடயத்தில் இந்திய அணி நிர்வாகம் செய்தது தவறு என்று இந்த செய்தியின் மூலம் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையும் படிங்க : பும்ரா எடுத்த அந்த ஒரு விக்கெட் தான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு திருப்பியது – ராபின் உத்தப்பா புகழ்ச்சி

அதேபோன்று டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சூரியகுமார் யாதவ் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்றும் கண்டிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவரிடம் இருந்து ரன்கள் வரவேண்டும் என்று தான் நம்புவது நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -