எனது கேரியரை திரும்பி பார்க்கும்போது குறைகூற எதுவுமில்லை என்றாலும் வருத்தமாக உள்ளது – இர்பான் பதான்

irfan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார் . அதன்பின்னர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ள இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் 24 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது நேற்று முன்தினம் அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல் தொடரிலும் ஏலம் போகாததால் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய இர்பான் பதான் குறிப்பிடுகையில் : 2016-ஆம் ஆண்டு முஷ்டாக் அலி கோப்பையில் அதிக ரன்களை குவித்தது மட்டுமின்றி ஆல்-ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன். ஆனால் தேர்வாளர்கள் என்னுடைய பவுலிங்கில் திருப்தி இல்லை என்று கூறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Pathan-3

மேலும் 2016 ஆம் ஆண்டு இனி எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க போவதில்லை என்பதனை நான் நன்றாக உணர்ந்தேன். ஒரு சில வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கையை 27 வயதில் ஆரம்பித்து 35 வரை ஆடுகிறார்கள். ஆனால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது குறைகூற எதுவும் இல்லை என்றாலும் என் வாழ்வில் நிறைய கிரிக்கெட் இல்லாததால் வருத்தமாக உள்ளது.

Pathan 1

27 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வர ஆரம்பித்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் நான் ஆடி இருந்தால் மேலும் பல விக்கெட்டுகளையும் ரன்களையும் குவித்து என்னை நிரூபித்து இருப்பேன். மேலும் எனக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்றும் இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement