சென்னை அணி வெற்றி பெற்ற போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததா ? – இர்பான் பதான் காட்டம்

pathan 1
Advertisement

ஐபிஎல் தொடர் எப்போது நடைபெற்றாலும் குறிப்பிட்ட சில பலம் வாய்ந்த அணிகள் வலுவிழந்த அணியுடன் தோல்வியை தழுவும் போதோ அல்லது முக்கிய போட்டிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் போதோ அந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடப்பதாக ரசிகர்கள் காலம் காலமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது வாடிக்கை ஆகிவிட்டது. அந்த வகையில் தற்போது இந்த சீசனின் முதலாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

dhoni

இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி பெற்ற வெற்றியின் மூலம் ஒன்பதாவது முறையாக அந்த அணி பைனலில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்று இருக்குமோ ? என்பது போன்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

- Advertisement -

ஏற்கனவே இதற்கு முன்னதாக மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் அணி மோதும்போது மும்பை அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்று இருந்த நிலையில் மும்பை அணி 235 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக அந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்தது என்று கற்பனையாக சிலர் கருத்துக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் இதுபோன்ற மேட்ச் பிக்சிங் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெளிவான கருத்தினை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் : முன்னதாக மும்பை போட்டியின் போதும் மேட்ச் பிக்ஸிங் இருக்குமோ ? என்று சொல்லியிருந்தீர்கள். இப்போது சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்திய போட்டியிலும் மேட்ச் பிக்சிங் நடந்ததோ ? என்று அதே விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். இது எல்லாம் முட்டாள்தனம் மற்ற அணிகள் விளையாடி ஆட்டத்தில் வெற்றி பெறும்போது அந்த அணிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அடுத்து ஆர்.சி.பி அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் அவரது சிஷ்யன் – நல்ல சாய்ஸ் தான்

அவர்கள் எப்படி விளையாடினார்கள் ? என்பதை கவனிக்க வேண்டுமே தவிர அதை தவிர்த்து மேட்ச் பிக்சிங் நடந்ததா ? என்பது போன்ற முட்டாள்தனமான கற்பனைகள் எதற்கு ? என மேட்ச் பிக்ஸிங் குறித்து பதிவிட்ட ரசிகர்களின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். முக்கியமான இதுபோன்ற போட்டிகளில் மேட்ச் பிக்சிங் என்பது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்று.

Advertisement