விராட் கோலிக்கு அடுத்து ஆர்.சி.பி அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் அவரது சிஷ்யன் – நல்ல சாய்ஸ் தான்

Kohli
- Advertisement -

நடப்பு 14-ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது பாதியில் ஏற்கனவே விராட் கோலி கூறியது போல இந்த தொடருக்கு பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், தான் அணியில் ஒரு வீரராக தொடரப்போவதாகவும் நேற்றைய போட்டியின் முடிவில் கூறியிருந்தார்.

Morgan

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி பதவியிலிருந்து விலகியதை அடுத்து பெங்களூர் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியின் சீனியர் வீரர் டிவில்லியர்ஸ்க்கு 37 வயதாகி விட்டதால் அவர் கேப்டனாக வாய்ப்பு இல்லை. அதே போன்று விராட் கோலிக்கு சமமான ஒரு வீரரை பெங்களூரு அணி கேப்டனாக நியமிக்க விரும்புகிறது.

அந்த வகையில் மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் அவர் மும்பை அணியில் இருந்து வெளியேற விரும்பவில்லை என்று தெரிகிறது. அதே வேளையில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரரான கே.எல். ராகுலை ஆர்சிபி அணி கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rahul

இந்த உடன்பாடு வெற்றிகரமாகவும் முடிந்துள்ளதால் நிச்சயம் கே.எல் ராகுல் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டு அடுத்த ஆண்டு அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உகோ : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யவுள்ள பி.சி.சி.ஐ – அந்த வீரர் யார் தெரியுமா ?

ஏற்கனவே கே.எல் ராகுல் 2013ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் பெங்களூரு அணிக்கு திரும்பி பெங்களூரு அணியை முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement