சென்னை அணியை இப்படி ஒரு நிலைமைல பாப்பேன்னு நெனச்சி கூட பாக்கல – இர்பான் பதான் வருத்தம்

- Advertisement -

ஐபிஎல் தொடரில் எப்போதும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் சிஎஸ்கே அணிக்கு மற்ற அணிகளை காட்டிலும் ஒரு தனித்துவம் உண்டு. ஏனெனில் பெரும்பாலான தொடர்களில் அதாவது இதுவரை தான் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்றால் அது சிஎஸ்கே தான். அந்த அளவிற்கு சி.எஸ்.கே அணி ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

CSK-1

ஆனால் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே மோசமாக விளையாடி வருகிறது. அதற்க்கு முக்கிய காரணமாக அணியில் இருந்து திடீரென்று விலகிய சுரேஷ் ரெய்னாவின் இடத்தை நிரப்ப இன்னும் சரியான இடத்தை தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

மேலும் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற அடுத்தடுத்து இரு போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்துள்ளது. மேலும் சென்னை அணி இன்னும் செட் ஆகவில்லை என்று தோனியும் வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில் :

Raina

முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செட்டில் ஆகாத நிலையில் இருப்பதை நான் பார்க்கிறேன். சுரேஷ் ரெய்னா போட்டிக்கு முன்னதாக நாடு திரும்பியது பிரச்சனையை உண்டாக்கியது. மேலும் தற்போது வரை அவரின் இடத்திற்கு மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை.

csk

அணி கலவையிலும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா விளையாடினால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் உடன் அவர்கள் விளையாட முடியும். ஆனால் தற்போது சென்னை அணியில் 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர் என்று இர்பான் பதான் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement