2025 ஐ.பி.எல் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட இர்பான் பதான் – காரணம் என்ன?

Irfan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது சீசனானது நேற்று மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது.

வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட இர்பான் பதான் :

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று இந்த தொடரானது சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மொழிகளிலும் வர்ணனை செய்யப்பட்டும் வருகிறது.

- Advertisement -

அப்படி இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரினை வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. பல்வேறு மொழிகளில் ஐபிஎல் தொடரானது ஒளிபரப்பவதால் ஒவ்வொரு குறிப்பிட்ட மொழிக்கும் தனித்தனியே வர்ணனையாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதில் கடந்த சில ஆண்டுகளாகவே வர்ணனை செய்து வரும் முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதானிற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்படி வர்ணனையாளர் குழுவில் இருந்து அவரை நீக்குவதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது விராட் கோலியின் ஆட்டத்தை பதான் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசியிருந்தார். அதோடு அவருடைய சொந்த விடயங்களையும், பழக்க வழக்கங்களையும் பற்றி பேசி இருந்தார். அதேபோன்று ஹார்டிக் பாண்டியாவின் கம்பேக் குறித்தும், அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடாதது குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

இதையும் படிங்க : ரஹானே செய்த அந்த தவறே பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – சுரேஷ் ரெய்னா விமர்சனம்

இப்படி வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை விமர்சித்து தாக்கும் வகையில் பேசியதாலயே இர்பான் தான் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement