- Advertisement -
ஐ.பி.எல்

8 வாய்ப்பை விட்ட சிஎஸ்கே மாதிரி.. லெஜெண்ட்ஸ் தொடரில் நாங்க கூட விடமாட்டோம்.. இர்பான் பதான் விளாசல்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக திணறலாக விளையாடி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியிலேயே மும்பை அணியை போராடித் தோற்கடித்த சென்னை அடுத்ததாக சேப்பாக்கத்தில் 17 வருடங்கள் கழித்து பெங்களூரு அணியிடம் மண்ணைக் கவ்வியது. அடுத்ததாக ராஜஸ்தான் அணியிடம் கடைசி ஓவரில் தோற்ற சென்னை மீண்டும் சேப்பாக்கத்தில் 15 வருடங்கள் கழித்து டெல்லியிடம் மண்ணைக் கவ்வியது.

அந்த நிலையில் நேற்று முள்ளான்பூரில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யா 103 ரன்கள் எடுத்த உதவியுடன் 220 ரன்களை எடுத்தனர். அதைத் துரத்திய சென்னைக்கு ரச்சின் 36, கேப்டன் ருதுராஜ் 1 ரன்னில் அவுட்டானார்கள்.

- Advertisement -

திணறும் சென்னை:

அதிரடியாக விளையாடிய சிவம் துபே 42 ரன்களில் அவுட்டான நிலையில் நங்கூரமாக விளையாடிய கான்வே அதிரடி காட்டத் தடுமாறியதால் 69* (49) ரன்னில் ரிட்டையர்டு அவுட்டாகி சென்றார். இறுதியில் தோனியும் 27 ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் இந்த வருடம் தொடர்ந்து நான்காவது தோல்வியைப் பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தொடர்கிறது.

இந்த தோல்விகளுக்கு சென்னை அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான இந்தப்போட்டியில் சென்னை மொத்தம் 8 கேட்ச்களை தவற விட்டதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இவ்வளவு கேட்ச்களை லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் விளையாடும் தங்களைப் போன்ற வயதான ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் கூட விட மாட்டார்கள் என்றும் அவர் விளாசியுள்ளார்.

- Advertisement -

பதான் விமர்சனம்:

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் 8 கேட்ச்களை தவற விட்டுள்ளார்கள். இவ்வளவு கேட்ச்களை லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் கூட விட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல இதுவரை சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளிலும் மற்ற 9 அணிகளை காட்டிலும் அதிக கேட்ச்களை விட்டுள்ளது.

இதையும் படிங்க: சி.எஸ்.கேவை சிதறடித்து சதமடித்த 24 வயது பஞ்சாப் வீரர்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? – சுவாரசிய தகவல் இதோ

அதுவே வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்க காரணம் என்று பஞ்சாப் போட்டி முடிந்ததும் கேப்டன் ருதுராஜ் கவலைத் தெரிவித்தார். மொத்தத்தில் எப்போதுமே தொடர்ச்சியாக அசத்தக்கூடிய அணி என்ற பெயரை பெற்ற சிஎஸ்கே இந்த வருடம் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. அதனால் அந்த அணி இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாலே அதைப் பெரிய சாதனையாக பார்க்கலாம்.

- Advertisement -