கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியது. ஆர்சிபி அணியில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தும் அந்த அணி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வந்த வேளையில் இறுதியாக 18வது ஆண்டு கோப்பையை கைப்பற்றியது.
விராட் கோலியிடம் நிச்சயம் அந்த பசி இருக்கும் : இர்பான் பதான்
இந்த வெற்றி அந்த அணி வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியானது இம்முறை நடப்பு சாம்பியனாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியானதற்கு பிறகு இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.
இதன் காரணமாக தற்போது ஆர்சிபி அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆர்சிபி அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ஆர்வம் காட்டும் என்றும் அதிலும் குறிப்பாக விராட் கோலி இன்னும் அதிக ஆர்வத்துடன் இந்த சீசனில் களமிறங்கி ஆர்.சி.பி அணியை கோப்பையை நோக்கி அழைத்துச் செல்வார் என்றும் முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலியின் உள்ளே இருக்கும் பசி நிச்சயம் கடந்த ஐபிஎல் தொடரை வென்றதற்கு பிறகு இன்னும் அதிகரித்திருக்கும். கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்றிய அவர் தொடர்ந்து இரண்டு ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்ல விரும்புவார். ஏற்கனவே தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரில் ஜோஷ் ஹேசல்வுட் ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா? – விவரம் இதோ
அந்த ஆட்டத்தை பார்த்தாலே ஒவ்வொரு போட்டியிலும் தான் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் விளையாடுவது தெரிகிறது. எனவே நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணி ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும் என்று அவர் முழு உத்வேகத்துடன் விளையாடுவார் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



