பாபர் அசாம் கண்டிப்பா இன்னைக்கு கஷ்டப்படுவாரு. ஆனா கோலிக்கு அப்படி இல்ல – இர்பான் பதான் கருத்து

Irfan-Pathan
- Advertisement -

எப்பொழுதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஏனெனில் இவ்விரு அணிகளும் இருநாட்டு கிரிக்கெட் தொடர்களில் மோதிக்கொள்ளாமல் ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களிலேயே பங்கேற்று விளையாடி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும்.

அதோடு இந்தியா அணி பாகிஸ்தான் அணியிடம் 50 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் ஒரு முறைகூட தோல்வியை சந்தித்து இல்லை என்கிற நிலையில் இன்று அகமதாபாத் நகரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு முக்கிய லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. சமீப காலமாகவே இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியுடன் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஏனெனில் விராட் கோலி எவ்வாறு தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி படிப்படியாக முன்னேறினாரோ அதேபோன்று தற்போது பாபர் அசாமும் தனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை கண்டு வருகிறார். ஆனாலும் அவர் சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே ரன் குவிக்கிறார் என்றும் பெரிய அணிகளுக்கு எதிராக ரன் குவிப்பதில்லை என்ற ஒரு விமர்சனமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் பாபர் அசாமை விட விராட் கோலி எங்கேயோ உயரத்தில் இருக்கிறார். அவரை இவருடன் ஒப்பிட்டு பேசக்கூடாது என்றும் இந்த போட்டியில் பாபர் அசாம் கஷ்டப்படுவார் என்றும் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இர்பான் பதான் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

பாபர் அசாம் இந்திய அணிக்கு எதிராக வெறும் 28 ரன்கள் மட்டுமே சராசரி வைத்துள்ளார். அதே வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி 55 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதை கணக்கிட்டுப் பார்த்தாலே பாபர் அசாமை விட விராட் கோலி எவ்வளவு சிறந்தவர் என்பது தெரியும். அதோடு உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாபர் அசாம் நிச்சயம் இன்று கஷ்டப்படுவார். ஆனால் விராட் கோலிக்கு அதேபோன்று கிடையாது.

இதையும் படிங்க : 1999 மாதிரி இந்தியாவை தோற்கடிப்போம்.. சவால் விட்ட அக்தருக்கு.. முனாப் படேல் பதிலடி

அவர் இதேபோன்று பல அழுத்தமான போட்டிகளை சந்தித்து அதிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவரால் இன்றும் சிறப்பாக செயல்பட முடியும் என்று தனது கருத்தினை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இர்ஃபான் பதான் பதிவிட்டுள்ள இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 13-வது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டியானது அக்டோபர் 14-ஆம் தேதி இன்று அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement