இத்தனை வருஷத்தில் நான் தோனி இந்த பயிற்சி செய்து நான் பார்த்ததே இல்லை – இர்பான் பதான் வியப்பு

pathan 1

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்னும் சில தினங்களில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இத்தொடர் 54 நாட்கள் நடைபெறும். இத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தொடருக்கான முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான இர்பான் பதான் சென்னை அணியின் பயிற்சி குறித்தும் தோனி பங்கேற்றது குறித்தும் சில ஆச்சரியமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : பொதுவாக தோனி எப்போதும் பேட்டிங் பயிற்சி செய்வதையே அதிகம் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறை வலைப்பயிற்சியில் அவர் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்ட வீடியோவை நான் பார்த்தேன். நான் அவருடன் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி உள்ளேன்.

Dhoni 1

ஆனால் இப்படி ஒரு காட்சியை நான் இதுவரை கண்டதே இல்லை. எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவர் ஒருபோதும் கீப்பிங்கிங் பயிற்சி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை ஆனால் இம்முறை அவர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் ஒரு வருடத்திற்கு மேலாக தோனி விளையாடவில்லை என்பதால் கூட இருக்கலாம்.

- Advertisement -

Dhoni 2

மேலும் புதிய பவுலர்களை அவர் சந்திக்க இருப்பதாலும், புதிய இடம், புதிய சூழ்நிலை என்ற காரணத்தினாலும் கீப்பிங் பயிற்சியில் இறங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இப்படி அவர் கீப்பிங் பயிற்சி செய்து இத்தனை வருடத்தில் நான் கண்டதே இல்லை என்று இர்பான் பதான் குறிப்பிடத்தக்கது.