- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எப்படியும் ராணாவை விடமாட்டீங்க.. பேசமா அந்த தமிழக வீரரை தூக்கிட்டு குல்தீப்பை சேருங்க.. பதான் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அதே போல பந்து வீச்சுத் துறையில் குல்தீப் யாதவ் விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்தார். எனவே 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் விளையாடுவது அவசியம் என்றும் அஸ்வின் தெரிவித்திருந்தார். அது போன்ற சூழ்நிலையில் சுமாராக விளையாடி வரும் ஹர்ஷித் ராணாவை நீக்கி விட்டு அவரை விளையாட வைக்கலாம் என்பது பல ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

குல்தீப் யாதவ் விளையாடனும்:

இருப்பினும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், 23 வயது குழந்தை ராணாவை விமர்சிக்காதீர்கள் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு பயிற்சியாளரின் ஆதரவு இருப்பதால் ஹர்ஷித் ராணாவை இந்திய அணி நீக்கப்போவதில்லை என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை கழற்றி விட்டு குல்தீப்பை விளையாட வைக்கலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பதான் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் இந்திய அணியில் பொருந்துவாரா? அவருக்கு நீங்கள் இடத்தை வழங்க முடியுமா? நிதிஷ் ரெட்டி உங்களுக்கு 7 – 8 ஓவர்கள் வழங்குவார். 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் அவர் பேட்டிங் ஆழத்தையும் அதிகரிப்பார். எனவே குல்தீப் யாதவை நீங்கள் விளையாட வைக்கலாம்”

- Advertisement -

பதான் கருத்து:

“தற்போதைய இந்திய அணி 8வது இடம் வரை பேட்டிங் திறமையுடையவர்கள் இருப்பதை விரும்புகிறது. ஆனால் அணியை இப்படி தேர்ந்தெடுத்தால் ஓட்டுவது எளிதாக இருக்காது. ஆனால் குல்தீப் யாதவ் தற்போதைய ஆஸ்திரேலியாவின் பேட்டிங் துறையை திணறடிக்கும் திறமையைக் கொண்டுள்ளார். குறிப்பாக அவர்களுடைய மிடில் ஆர்டர் பாதிப்பாக இருக்கிறது. எனவே இந்தியா ரிஸ்க் எடுக்கலாம்”

இதையும் படிங்க: வார்னே சொன்னதை நிரூபிக்கும் ஜடேஜா மாடர்ன் பெஞ்சமின் பட்டன்.. 2027 உ.கோ தகுதியானவர்.. பாண்டிங், சாஸ்திரி

“ஒருவேளை ஹர்ஷித் ராணாவை நீங்கள் 8வது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய பவுலராக கருதினால் அவரை குளத்தில் தூக்கிப் போடுங்கள். அவரால் அங்கே பேட்டிங் செய்ய முடிந்தால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைப்பார்கள். அதை வைத்து வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -