முன்னாடியும் சொன்ன. இப்போவும் சொல்றேன் பெஸ்ட் கேப்டன்னா அது இவர்தான் – இர்பான் பதான் ட்வீட்

pathan 1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 1 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரை கைப்பற்றியது மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக இந்திய மண்ணில் 14-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வார இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளது. இந்நிலையில் அண்மையில் வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி மீண்டும் 124 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இந்திய அணியை அடுத்து நியூசிலாந்து அணி 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களில் யார் பெஸ்ட் கேப்டன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : நான் ஏற்கனவே இதைத்தான் கூறியிருந்தேன். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். விராட் கோலி தான் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் அவர் மட்டுமே 59% வெற்றி சதவிகிதத்தை வைத்துள்ளார். அதற்கடுத்துள்ள கேப்டன் 45 சதவீதம் மட்டுமே வைத்துள்ளதால் பெஸ்ட் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தான் என்று இர்பான் பதான் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : தலைகீழா நின்னு வொயிடு குடுத்த அம்பயர். மிஸ் பண்ணாம பாருங்க – வைரலாகும் வீடியோ

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட கேப்டன்கள் அணியை சிறப்பாக வழிநடத்தி இருந்தாலும் விராட் கோலி அணியை வெற்றிக்காக அழைத்துச்செல்லவே எப்போதும் எண்ணுகிறார் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement