தலைகீழா நின்னு வொயிடு குடுத்த அம்பயர். மிஸ் பண்ணாம பாருங்க – வைரலாகும் வீடியோ

Umpire
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி எந்த வகையான கிரிக்கெட்க்கும் அம்பயர் வேலை என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் களத்தில் நிற்கும் அம்பயர் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டி உள்ளது. அதே போன்று ஒரு தவறான முடிவு கூட ஆட்டத்தை பெரிதளவு மாற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அம்பயர் பணி என்பது எப்போதுமே கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான பணியாக பார்க்கப்படுகிறது. நவீன வசதிகள் பல வந்தாலும் களத்தில் நிற்கும் அம்பயர் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றனர்.

மேலும் களத்தில் இருக்கும் அம்பயர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது தவறான முடிவெடுத்து விட்டால் போட்டியின் முடிவே மாறும். ஆனால் இது போன்ற அழுத்தமான வேலையிலும் சில அம்பயர்கள் தங்களது கேலியான நடவடிக்கைகளால் ரசிகர்களின் கவனத்தை இருப்பார்கள். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் சில வித்தியாசமான அசைவுகளைக் கொண்ட அம்பயர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியில் அம்பயர் ஒருவர் வழங்கிய ஒரு வித்தியாசமான வொயிடு சிக்னல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் பந்து வீச்சாளர் வொயிடு வீச அதனை களத்தில் இருந்த அம்பயர் தலைகீழாக நின்று வொயிடு காண்பித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி தற்போது வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது. வித்தியாசமான முறையில் அவர் கொடுத்த இந்த வொயிடு வீடியோ தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement