இவரோட பவுலிங்கை எதிர்கொள்ள கோலிக்கு எப்போவுமே கஷ்டமா இருக்கும் – இர்பான் பதான் பேட்டி

Pathan

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்து கிரிக்கெட் உலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். உலகிலுள்ள எப்பேர்பட்ட பந்துவீச்சாளர்களையும் எதிர்த்து சிறப்பாக விளையாடும் தன்மையுடைய கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதம் விளாசவில்லை என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசி தற்போதுள்ள வீரர்கள் யாரும் எட்டாத வகையில் உயரத்தில் இருக்கிறார்.

kohli

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் கோலி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளரை கூட களத்தில் எதிர்கொள்வதில் கவலைப்பட மாட்டார்.

- Advertisement -

ஆனால் நிச்சயம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக எப்போதும் கோலி விளையாடுவதற்கு ஒரு சந்தேகம் இருக்கும். ஏனென்றால் அவர் நன்றாக பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர், ஸ்விங் பந்தை எதிர்கொள்ள உலகின் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் கஷ்டமாகவே இருக்கும்.

anderson

நீங்கள் அதை கோலியிடமே கேட்டு பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கம்மின்ஸ், ஆர்ச்சர் போன்ற அதிவேகப் பந்து வீச்சாளர்களுக்கு எதிராகக் கூட லேப் ஷாப், ரிவர்ஸ் ஸ்வீப் ஆகிய ஷாட்டுகளை விளையாட முடியும். ஆனால் ஆண்டர்சன் போல துல்லியமாக ஸ்விங் செய்யும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதுபோன்ற ஷாட்டுகளை விளையாடுவது கடினம்.

- Advertisement -

Anderson 1

அதுமட்டுமின்றி ஆப் சைடில் பந்தை ஸ்விங் செய்து வீசினால் கோலி ஆட்டம் இழக்க நேரிடலாம். ஏனெனில் ஆப் சைடில் வரும் பந்துகளை கோலி அதிகமாக கவர் டிரைவ் அடிப்பார் அதனால் நிச்சயம் அவர் ஆண்டர்சன் பந்தில் விரைவில் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement