இவர் பேட்டிங் செய்யும்வரை டீவி-ய ஆஃப் பண்ணாதீங்க – கொல்கத்தா வீரரை பாராட்டிய இர்பான் பதான்

pathan 1

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் என்ற பெரிய ரன் குவிப்பை வழங்கியது. துவக்க வீரராக டூபிளெஸ்ஸிஸ் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்கள் இருவரின் அதிரடி காரணமாக சென்னை அணி 220 என்ற பிரமாண்ட ரன்குவிப்பை வழங்கியது.

ruturaj

அதன்பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி பவர் பிளே 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான துவக்கத்தை கண்டது. அதன் பின்னர் போட்டி முடிந்தது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஆகியோர் இணைந்து சென்னை அணிக்கு பயத்தை காட்டினர். இருவரும் சரமாரியாக சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து ரன்களை சேர்த்தனர். ஒருகட்டத்தில் 11 ஓவர்களில் 112 ரன்கள் வந்த நிலையில் ரசல் ஆட்டமிழந்தும் வெளியேறினார்.

அதன்பின்னர் சென்னை அணி எளிதாக வெற்றியை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த வேலையில் கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்கள் குவிக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அவர் இருக்கும் வரை கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு வீரர்கள் அவரால் ரன் அவுட் ஆகி வெளியேறியதால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

russell

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது முக்கிய கட்டத்தில் அதாவது முதல் 6 ஓவர்கள் பவர் பிளேவிலேயே கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகள் விழுந்து விட்டதால் இனி கொல்கத்தா அணி எளிதில் தோற்றுவிடும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பு இல்லாமல் சென்று விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் களம்புகுந்த ரசல் தான் சந்தித்த பந்துகளை எல்லாம் சிக்சர் பவுண்டரி என அடித்து விருந்து படைத்தார். ஒரு கட்டத்தில் அவரது அதிரடியை பார்க்கும்போது கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்று தோன்றியது.

- Advertisement -

ஆனால் 22 பந்துகளில் 6 சிக்சர் 3 பவுண்டரி அடித்து 54 ரன்கள் எடுத்திருந்த ரசல் தவறான கணிப்பின் காரணமாக சாம் கரண் பந்துவீச்சில் போல்டு ஆனார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் ” ரசல் விளையாடும் வரை நீங்கள் உங்களது டிவியை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.