எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மிக பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஆறாவது கோப்பையை நோக்கி பயணிக்க தயாராகி வருகிறது. இம்முறை ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையிலான சி.எஸ்.கே அணியில் இளமையும், அனுபவமும் கலந்த வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இந்த தொடரில் சிஎஸ்கே அணி பெரியளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தோனி இல்லாமல் இதை நெனச்சி கூட பாக்க முடியல : இர்பான் பதான்
அதேவேளையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான தோனிக்கு இதுவே கடைசி தொடர் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் தற்போது 44 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனி கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதால் இந்த தொடரோடு தனது ஐபிஎல் கரியரை முடித்துக் கொள்வார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வேளையில் மஞ்சள் நிறத்தில் தோனியை நாம் பார்ப்பது இதுவே கடைசி சீசனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சென்னை அணியில் தோனி இல்லாமல் ஒரு ஐபிஎல் தொடரை கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. இந்த சீசனில் அவர் வீரர்களை ஒன்றிணைப்பதில் மிகப்பெரிய பங்கினை வகிப்பார்.
எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அணியில் புதிதாக இணைந்துள்ள சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு தோனியின் வழிகாட்டுதல் இந்த தொடரில் மிகவும் பயனுள்ளதாக அமையும். ரசிகர்களை பொறுத்தவரை சிஎஸ்கே அணியின் அடையாளமாக தோனியை பார்த்து விட்டனர். எனவே அவர் இல்லாமல் சிஎஸ்கே அணியை எவ்வாறு ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள்? என்பதும் தனக்கு வருத்தமாக உள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த 2 கப் ஜெயிச்சதெல்லாம் மேட்டர் இல்ல.. இனிதான் உண்மையான சவால் கம்பீருக்கு காத்திருக்கு – கங்குலி ஓபன்டாக்
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி இதுவரை 278 போட்டிகளில் விளையாடி 5439 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து விளையாடி வரும் அவர் ஐந்து முறை சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற வரலாற்று சாதனையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



