இந்த 2 கப் ஜெயிச்சதெல்லாம் மேட்டர் இல்ல.. இனிதான் உண்மையான சவால் கம்பீருக்கு காத்திருக்கு – கங்குலி ஓபன்டாக்

Ganguly and Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடன் பதவி விலகலுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரரான கௌதம் கம்பீரை கொண்டு வந்தது. அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் தோல்விகளை சந்தித்து வந்தாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபியை அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி வென்றது.

கவுதம் கம்பீருக்கு இனிதான் சவால் காத்திருக்கு : சவுரவ் கங்குலி

அதன்பிறகு அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பையும் வெற்றி பெற்று இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற பயிற்சியாளர் என்ற சாதனையையும் கம்பீர் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டு கோப்பைகளை வென்றுள்ள கம்பீர் இனிதான் உண்மையான சவாலை சந்திக்கப்போகிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி அவருக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் அவர் கூறியதாவது : எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலககோப்பை தொடரில் தான் கௌதம் கம்பீருக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டின் வானிலையையும், அங்குள்ள மைதானத்தின் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர் வீரர்களை தயார்படுத்த வேண்டும். அது அவருக்கு பெரிய சவாலாக இருக்கும்.

எனவே இனிவரும் போட்டிகளில் மைதானத்தின் தன்மையை கணித்து பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு துறைக்கும் சாதகமான ஆடுகளத்தை பற்றி மட்டுமே அவர் சிந்திக்க வேண்டும். மைதானத்தில் இரண்டு துறைகளுக்கும் சமமான போட்டி நிலவினால் மட்டுமே சிறப்பான முடிவு கிடைக்கும். அதற்கு நல்ல உதாரணம் இங்கிலாந்து தொடர்தான் என்று கங்குலி கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி கிட்ட போய் யாராலும் இந்த வார்த்தையை சொல்ல முடியாது.. அதுக்கு தைரியம் வேணும் – பத்ரிநாத் கருத்து

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கம்பீர் ஒரு மிகச் சிறந்த பயிற்சியாளர். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து சிறப்பாக இந்திய அணியை பயிற்றுவிக்கிறார். 2027 உலக கோப்பை தொடரானது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு கடைசி உலக கோப்பை தொடர். எனவே அதை வென்று கொடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பும் கம்பீருக்கு உள்ளது என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement