- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் மினி ஏலத்தில் இந்த 5 வீரர்களை வாங்க கடுமையான போட்டி இருக்கும் – இர்பான் பதான் கருத்து

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த மினி ஏலத்தில் எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்தும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த மினி ஏலத்திற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிக போட்டிக்கு செல்லும் 5 வீரர்கள் : இர்பான் பதான் கணிப்பு

ஏற்கனவே கடந்த நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்க வீரர்கள் விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று நிர்வாகம் கெடு விதித்திருந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களது பட்டியலை வெளியிட்டு விட்டன.

- Advertisement -

இந்நிலையில் மினி ஏலத்தில் மொத்தம் 1390 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்த வேளையில் 10 அணிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு அந்த வீரர்களின் பட்டியலை வெகுவாக குறைத்துள்ள பிசிசிஐ 1040 வீரர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு இறுதியாக 350 வீரர்களை மட்டுமே ஏலத்தில் இடம்பெற வைத்துள்ளனர்.

ஆனாலும் இந்த 350 வீரர்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே அனைத்து அணிகளால் வாங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த மினி ஏலத்தில் அதிக தொலைக்க போட்டிக்கு செல்லக்கூடிய வீரர்கள் யார்? என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் இந்த மினி ஏலத்தில் அதிக போட்டிக்கு செல்லக்கூடிய 5 வீரர்கள் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இர்பான் பதான் குறிப்பிட்ட அந்த ஐந்து வீரர்கள் யாரெனில் :

இதையும் படிங்க : இந்தியா மறுபடியும் பாகிஸ்தானை அவமானப் படுத்திட்டாங்க.. ஐசிசி மீது பாக் வாரியம் அதிருப்தி

ஆகாஷ் தீப், ஆகாஷ் மதுவால், கேமரூன் கிரீன், ஆண்ரிச் நோர்க்கியா, மதீஷா பதிரானா ஆகியோரை வாங்க பல அணிகளுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவும் என்று இர்பான் பதான் கணித்துள்ளார். எதிர்வரும் இந்த 2026 ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலமானது டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -