உலகக்கோப்பை 2023 : இம்முறை இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – இர்பான் பதான் கணிப்பு

Irfan-Pathan
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது இன்னும் ஒரு வாரத்திற்குள் துவங்க இருப்பதினால் தற்போதே கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்த தொடரின் மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் இந்தியா வந்து பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இவ்வேளையில் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்? எந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதோடு இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் முதன்மை அணியாக இந்திய அணியை இறுதி போட்டியில் விளையாடும் என்று தேர்வு செய்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இம்முறை உலகக் கோப்பை நடைபெறுவதாலும் தற்போதுள்ள இந்திய அணியின் வீரர்களின் பலத்தினையும் வைத்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த பல தொடர்களாகவே இந்திய அணி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக தற்போது ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இறுதிப் போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறும் என்று நினைக்கிறேன். அதற்கு அடுத்து இரண்டாவது அணியாக இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணியில் சரியான பேட்டிங் வரிசை மற்றும் பவுலிங் வரிசை இருப்பது மட்டுமின்றி ஆல்ரவுண்டர்களின் பலமும் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற உலகக்கோப்பை போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருக்கும் அணி நிச்சயம் ஒரு அபாயகரமான அணியாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : 2023 உ.கோ டீம்ல அவரை கழற்றி விட்டு தப்பு பண்ணிட்டீங்க.. பெஞ்சிலாவது வெச்சுருக்கலாம் – தேர்வுகுழுவை விமர்சித்த யுவராஜ் சிங்

அதோடு கூடுதலாக நான் தென்னாப்பிரிக்க அணியும் இந்த தொடரில் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்புள்ள ஒரு அணியாக கருதுகிறேன். ஏனெனில் தென்னாப்பிரிக்க அணியை பொருத்தமட்டில் தற்போது உள்ள பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் வைத்து பார்க்கும் போது அந்த அணி மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறது. அந்த அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என்பதால் இறுதி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே இந்திய அணியுடன் இறுதி போட்டியில் இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளில் எதாவது ஒரு அணி மோதும் என்று தான் கருதுவதாக இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement