- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கே.எல் ராகுல் இல்லை.. 3 ஆல்ரவுண்டர்களுக்கு இடம்.. இர்பான் பதான் தேர்வுசெய்த இந்திய அணி – லிஸ்ட் இதோ

அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.

இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான முதலாவது போட்டியானது நாளை ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் வடோதரா நகருக்கு சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து தனது உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை கணித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் காயம் காரணமாக கடந்த தொடரை தவறவிட்ட கேப்டன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்த முதல் போட்டியில் இடம் அளித்துள்ளார்.

அதுமட்டும் இன்றி விக்கெட் கீப்பரான கே.எல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மற்றபடி மூன்று ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு இடமளித்து வித்தியாசமான தேர்வை வழங்கியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் வெளியிட்டுள்ள இந்த பிளேயிங் லெவனில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இர்பான் பதான் கணித்து வெளியிட்டுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நியூசி அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) ரவீந்திர ஜடேஜா, 7) நிதீஷ் குமார் ரெட்டி, 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஹர்ஷித் ராணா, 10) அர்ஷ்தீப் சிங், 11) முகமது சிராஜ்.

- Advertisement -