நியூசி அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND vs NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நாளை ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் துவங்குகிறது. இதன் காரணமாக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தற்போது வடோதரா நகருக்கு சென்றடைந்து அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த முதல் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இந்த முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் இரண்டாவது ஒருநாள் போட்டியும், பிறகு ஜனவரி 18-ஆம் தேதி இந்தூர் நகரில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற இருக்கின்றது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்கவுள்ள இந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி நாளைய இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடுவது உறுதி.

அதன்பின்னர் மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதும் உறுதி. ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலும் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

- Advertisement -

எட்டாவது இடத்தில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணவும், ஒன்பதாவது இடத்தில் முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம்பெறுவார். 10 மற்றும் 11 ஆகிய இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்கும். அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்திய அணியில் முகமது ஷமியின் இடத்தை இனி இவர்தான் பூர்த்தி செய்யணும் – இர்பான் பதான் கருத்து

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ரவீந்திர ஜடேஜா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) ஹர்ஷித் ராணா, 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் யாதவ், 11) முகமது சிராஜ்.

Advertisement